spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாசத்துக்கு முன்னாடி நான் பனி... அம்மா உடன் தளபதி விஜய்!

பாசத்துக்கு முன்னாடி நான் பனி… அம்மா உடன் தளபதி விஜய்!

-

- Advertisement -

நடிகர் விஜய் அம்மா சோபா சந்திரசேகர் உடன் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப்  படத்திற்கு இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

we-r-hiring

தற்போது விஜய் புகைப்படங்கள் வெளியானாலே சமூக வளாகங்களில் பயங்கர வைரல் ஆகிவிடுகிறது. அந்த வகையில் தற்போது விஜய் தனது அம்மா சோபா சந்திரசேகருடன் விஜய் காணப்படும் புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

விஜய் தனது அப்பா அம்மாவின் 50 ஆவது திருமண விழாவை கொண்டாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அந்தப் புகைப்படங்களும் வெளியாகலாம்.

விஜய் எப்போதும் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் தன்னுடன் நேரம் செலவிட முடிவதில்லை என்று சோபா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் புகைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் உடனான படத்தை முடித்ததும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ