spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு... நெகிழ்ச்சி அடைந்த அசோக் செல்வன்

திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவு… நெகிழ்ச்சி அடைந்த அசோக் செல்வன்

-

- Advertisement -

நடிகர் அசோக் செல்வன் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் அதிக இளம் ரசிகர்களை பெற்றுள்ள நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான நித்தம் ஒரு வானம்  திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது சபாநாயகன் என்ற படத்தில் அசோக் செல்வன் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தது எடுத்தது அவர் உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

“10 ஆண்டுகள் மின்னல் போல ஓடிவிட்டன. இந்த காலம் நல்லது, கெட்டது மற்றும் இடைப்பட்ட தருணங்களால் நிரப்பப்பட்டது. சிறிய வெற்றிகள் மற்றும் தேவையான தோல்விகள் மூலம் அதிகம் கற்றுக்கொண்டேன்.
ஏதும் இல்லாத ஒரு இடத்திலிருந்து இன்று ஒரு நம்பிக்கைக்குரிய நடிகராக இருந்து அங்கீகாரம் பெறும் வரை இந்தப் பயணம் தொடர்ந்து வருகிறது.  இந்த அருமையான  தசாப்தத்தின் ஒவ்வொரு தருணத்தையும் நான் எந்த வருத்தமும் இல்லாமல் வாழ்ந்து நேசித்தேன். என்னை ஒன்றிணைத்த அற்புதமான உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்! சாத்தியமான எல்லா வழிகளிலும் உங்களை மகிழ்விக்கவும், கவரவும், ஊக்கப்படுத்தவும், என்னுடைய சிறந்ததையும் அதற்கு அப்பாலும் கொடுப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.

நான் தொடங்கிய இடத்திலிருந்து நான் வெகுதூரம் வந்துவிட்டேன், ஆனால், நான் எங்கு செல்ல விரும்புகிறேனோ, அங்கு செல்ல இப்போது தான் ஆரம்பித்துள்ளேன்.
ஒவ்வொரு படத்திலும் உங்கள் மனதைத் தொட வேண்டும் என்ற எண்ணம் ஒரு நிலையான உந்து சக்தியாக இருந்து வருகிறது, மேலும் அது வெவ்வேறு வகையான படங்கள் மற்றும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்.

என்னுடைய ஒரு படம் உங்களை எப்படியாவது உங்கள் மனதை வென்றிருந்தால் என்னுடைய நோக்கம் நிறைவேறியது. நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன்.
மீண்டும், என்னுடன், எனக்காக இருந்த பார்வையாளர்கள், ரசிகர்கள், ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி மற்றும் அன்பு.” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ