Homeசெய்திகள்சினிமாபல இயக்குநர்களை உருவாக்கியவர் ஆர்.பி.செளத்ரி – ரஜினிகாந்த புகழாரம்

பல இயக்குநர்களை உருவாக்கியவர் ஆர்.பி.செளத்ரி – ரஜினிகாந்த புகழாரம்

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனருமான ஆர்.பி. சௌத்ரி இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து தமிழ் திரைப்பட உலகை உயிர்ப்புடன் வைத்திருந்த சிறந்த தயாரிப்பாளர் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.பல இயக்குநர்களை உருவாக்கியவர் ஆர்.பி.செளத்ரி – ரஜினிகாந்த புகழாரம்

திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான ஆர்.பி. செளத்ரி மறைவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆர்.பி. செளத்ரி அவர்களுடன் நான் பணியாற்றி உள்ளேன். அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். சமீபத்தில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பின் போது கூட என்னை நேரில் சந்தித்து பேசினார்” என நினைவுகூர்ந்தார்.

we-r-hiring

மேலும், தமிழ் திரையுலகிற்கு ஏராளமான இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு என்றும், அவர் தயாரித்த திரைப்படங்களில் பெரும்பாலும் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்றும் ரஜினி தெரிவித்தார். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலும், அதை தொலைபேசியில் அல்லாமல் நேரில் சென்று பேசிப் பரிசீலித்து தீர்த்து வைப்பது அவரது தனித்துவம் எனவும் கூறினார். “பிரச்சனை இருந்தால் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டிற்கே சென்று பேசுவார். பிரச்சனையை சரிசெய்த பிறகு, அங்கே காபி குடித்துவிட்டு தான் திரும்புவார். அந்த அளவுக்கு எளிமையான மனிதர்” என்று அவர் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

இறுதியாக, “அவர் ஒரு அருமையான மனிதர். அவரை இழந்தது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று ரஜினிகாந்த் கண்கலங்கியபடி தெரிவித்தார்.

நடிகை ஸ்ரீதேவி சொத்து விவகாரம் – வழக்கை நிராகரித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

MUST READ