spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமனோபாலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஓடி வந்த விஜய்!

மனோபாலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஓடி வந்த விஜய்!

-

- Advertisement -

நண்பர் மனோபாலாவுக்கு விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் மனோபாலா இன்று காலை திடீரென காலமானதால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

we-r-hiring

தென்னிந்தியத் திரையுலகில் சுமார் 1000 படங்களுக்கு மேல்  நடித்து சாதனை படைத்தவர் மனோபாலா. பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதனும் கூட. இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துகொள்வார்.

காமெடி கதாபாத்திரங்களில் மக்கள் மனதில் நிலைத்து நின்ற சில நடிகர்களில் மனோபாலா மிகவும் முக்கியமானவர். தற்போது வரை மிகவும் ஆக்டிவாக பல படங்களில் அவர் நடித்து வந்தார்.

கல்லீரலில் பிரச்சனை சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். இந்நிலையில் திடீரென மனோபாலா காலமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனோபாலா வின் மறைவு செய்தி கேட்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் விஜய் மனோபாலாவுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். மனோபாலா விஜய் உடன் பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நண்பன் படத்தில் மனோபாலா நடித்திருந்தார்.

தற்போது பல வேலைகளுக்கு மத்தியில் இறுதி அஞ்சலி செலுத்த விஜய் நேரில் வந்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும்  மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

MUST READ