spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுலக்னோ அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி!

லக்னோ அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி!

-

- Advertisement -

 

Photo: IPL Twitter Page

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 51வது லீக் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 07) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எதிர்கொண்டது.

we-r-hiring

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, சுப்மன் கில் 94 ரன்களையும், விரித்திமான் சஹா 81 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 25 ரன்களையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ்.

மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த தி.மு.க. அரசு….. செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன?

லக்னோ அணி தரப்பில் அதிகபட்சமாக, டி குக் 70 ரன்களையும், கெயில் மேயர்ஸ் 48 ரன்களையும் எடுத்துள்ளனர். குஜராத் அணி தரப்பில், மோஹித் சர்மா 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, ரஷீத் கான், நூர் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

லக்னோ அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி!
Photo: IPL Twitter Page

புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ