Homeசெய்திகள்கட்டுரைதமிழக முதல்வர் விஜய்க்கு நீட் கோச்சிங் சென்டர்களில் முதலீடு: குற்றஞ்சாட்டும் டாக்டர் பொன்ராஜ்!

தமிழக முதல்வர் விஜய்க்கு நீட் கோச்சிங் சென்டர்களில் முதலீடு: குற்றஞ்சாட்டும் டாக்டர் பொன்ராஜ்!

-

- Advertisement -

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுதும் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் நீட் பயிற்சி மையங்களில் (Coaching Centers) முதலீடு செய்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் பொன்ராஜ் பகிரங்கக் குற்றச்சாட்டைக் வைத்துள்ளார். ‘தமிழ் குரல்’ யூடியூப் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் அவர் இது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

டாக்டர் பொன்ராஜ்

we-r-hiring

ரூ.50,000 கோடி கோச்சிங் சென்டர் பிசினஸ்:

நேர்காணலில் டாக்டர் பொன்ராஜ் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

கோச்சிங் சென்டரில் முதலீடு: “மாணவர்களுடன் நிற்பேன் என்று பேசும் தமிழக முதல்வர் விஜய், நீட் பயிற்சி மையத்தில் இன்வெஸ்ட் செய்துள்ளார். தேர்தல் அபிடவிட்டை (Affidavit) படித்தாலே இது தெளிவாகத் தெரியும். இந்தியாவில் 2014-ல் ரூ.2,000 கோடியாக இருந்த கோச்சிங் சென்டர் பிசினஸ், தற்போது ரூ.50,000 கோடியாக (வெள்ளைப் பணம் ரூ.30,000 கோடி + கருப்புப் பணம் ரூ.20,000 கோடி) வளர்ந்துள்ளது. இந்த கார்ப்பரேட் பிசினஸில் விஜயும் ஒரு பங்குதாரர்.”

பாஜகவின் பிராக்ஸி அரசு: “தமிழகத்தில் தற்போது நடப்பது பாஜகவின் ‘ப்ராக்ஸி கவர்மெண்ட்’ (Proxy Government) தான். பாஜக கொள்கை எதிரி என்று வெளியே சொல்லிவிட்டு, அண்டர்கிரவுண்டில் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள்.”

மருத்துவக் கல்வியின் கார்ப்பரேட்டைசேஷன்: “கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குப் பயனளிக்கும் வகையில், ஏழை மாணவர்கள் மருத்துவராவதைத் தடுக்கும் சங்கிலித் தொடர் திட்டமே இந்த நீட் தேர்வு. ஏழை மாணவர்கள் படித்து மருத்துவரானால் கிராமப்புற சேவைக்குச் சென்றுவிடுவார்கள்; இதனால் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்பதால், வசதிபடைத்தவர்கள் மட்டுமே படிக்கும் நிலையை உருவாக்குகிறார்கள்.”

மத்திய அரசை நோக்கி விமர்சனம்:

டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களை மத்திய அரசு கொடூரமாகக் கையாள்வதாகவும், ஈவிஎம் (EVM) இயந்திரங்கள் மூலம் தொடர் வெற்றிகளைப் பெற்று, கார்ப்பரேட் கொள்கைகளையும் புதிய கல்விக் கொள்கையையும் திணிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மாணவர்களுக்காக நிற்பதாகக் கூறும் அரசியல் தலைவர்கள், பின்னணியில் கார்ப்பரேட் வணிக நலன்களுடனே கைக்கோர்த்துள்ளனர் என்பதை இத்தகைய நிகழ்வுகள் காட்டுவதாக டாக்டர் பொன்ராஜ் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் வெடித்தது நேரடி போர்: ஈரானுக்கு எதிராக களமிறங்கிய குவைத், பஹ்ரைன் – உலகப் பொருளாதாரத்திற்கு பேராபத்து!

MUST READ