Homeசெய்திகள்கட்டுரை"மோடி அமைச்சரை வீழ்த்திய இளைஞர் போராட்டம்; பாஜக குரலிலேயே தமிழக அரசும் பேசுவதா?": சூர்யா கிருஷ்ணமூர்த்தி...

“மோடி அமைச்சரை வீழ்த்திய இளைஞர் போராட்டம்; பாஜக குரலிலேயே தமிழக அரசும் பேசுவதா?”: சூர்யா கிருஷ்ணமூர்த்தி காரசாரம்!

-

- Advertisement -

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், மத்திய அமைச்சரின் பதவி விலகல் பின்னணி மற்றும் கருத்துரிமை மீதான தாக்குதல்கள் குறித்து ‘லெமூரியா ஸ்டுடியோ’ நிகழ்வில் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய உரை பெரும் கவனிப்பைப் பெற்றுள்ளது.

சூர்யா கிருஷ்ணமூர்த்தி

we-r-hiring

வரலாற்றில் முதல்முறை: இளைஞர் போராட்டத்துக்குப் பணிந்த மத்திய அரசு

நிகழ்வில் உரையாற்றிய சூர்யா கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் இல்லாத காலத்திலும் ஒரு தொடர் போராட்டத்தின் மூலமாகவே மத்திய பாஜக அமைச்சரவையில் இருந்த ஒருவரைப் பதவி விலகச் செய்த பெருமை இந்திய இளைஞர்களையே சேரும் எனச் சுட்டிக்காட்டினார்.

“பொதுவாக எந்தப் போராட்டம் நடந்தாலும், ‘இந்தப் போராட்டத்தின் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள், இவர்கள் சமூக விரோதிகள் அல்லது தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தி, பொதுமக்களை விலகி நிற்க வைப்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் வழக்கமான உத்தி. ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் போராட்டக்காரர்களை முடக்குவதே அவர்களின் வேலை. ஆனால், எந்த முத்திரையையும் குத்த முடியாமல், வரலாற்றில் முதல்முறையாக பாஜகவை இளைஞர்களின் போராட்டம் திணறடித்து அடியை வாங்க வைத்திருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

பாஜக டோனிலேயே பேசும் தமிழக அமைச்சர்கள்?

மத்தியில் கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், “இந்தப் போராட்டத்தை யாரோ பின்னணியில் இருந்து தூண்டுகிறார்கள்” எனக் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் உள்ள அதிகார மையங்களும் அதே தொனியிலேயே பேசுவதாகக் குற்றம் சாட்டினார்:

ஒரே குரல்: மத்தியில் பாஜக என்ன தொனியில் பேசுகிறதோ, அதே ‘ட்யூன்’-இல் தான் இங்கிருக்கும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் போன்றோரும் “போராட்டங்களைத் தூண்டுகிறார்கள்” என்று பேசுகிறார்கள்.

கல்வி உரிமை பற்றிய குழப்பம்: ஏற்கெனவே பொதுப்பட்டியலில் (Concurrent List) இருக்கும் கல்வியை மீண்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு வருவோம் எனக் கூறிக்கொண்டு, மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரும் உண்மையான கோரிக்கையைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணாவின் முதன்மைப் பாசறை பாடம்

கருத்துரிமை மற்றும் ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய சூர்யா கிருஷ்ணமூர்த்தி, திமுக தொடங்கப்பட்ட நாளில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நினைவுகூர்ந்தார்:

“கட்சியைத் தொடங்கிய முதல் நாளிலேயே பேரறிஞர் அண்ணா வழங்கிய முதன்மைப் பணி — எழுத்துரிமை, பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடுவதுதான். தந்தை பெரியார் அளித்த பயிற்சியில், கருத்துச் சுதந்திரத்திற்காகச் சிறை செல்லவும் தயார் என்று அண்ணா முழங்கினார். கம்யூனிஸ்டுகளையும், ஜனநாயக சக்திகளையும், சமதர்மத் தோழர்களையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.”

ஊழி காலத்தை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

75 ஆண்டுகால வரலாற்றில் அண்ணா அளித்த அந்த அடிப்படை டாஸ்க் இன்றைக்கும் மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும் கருத்துரிமைப் பறிப்புகளும் தொடரும் இந்தச் சூழலில், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் ஊடகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நின்று போராட வேண்டிய நெருக்கடி மீண்டும் உருவாகியுள்ளது என வலியுறுத்தினார்.

“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு; அரசியல் களத்தில் அமைதி காப்பது ஏன்?”: மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் சுடச்சுட கேள்வி!

MUST READ