Homeசெய்திகள்விளையாட்டுஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் அசத்தல் சாதனை: 230 இடங்கள் எகிறி டாப் 50-க்குள் நுழைந்த...

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் அசத்தல் சாதனை: 230 இடங்கள் எகிறி டாப் 50-க்குள் நுழைந்த வைபவ் சூர்யவன்ஷி!

-

- Advertisement -

ஜிம்பாப்வே தொடரில் 151 ரன்கள் குவித்து ‘தொடர் நாயகன்’ விருது வென்ற இளம் வீரருக்குக் கிடைத்த அசாத்திய அங்கீகாரம்!ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் அசத்தல் சாதனை: 230 இடங்கள் எகிறி டாப் 50-க்குள் நுழைந்த வைபவ் சூர்யவன்ஷி!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒரே அடியாக 230 இடங்கள் முன்னேறிப் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் உலகளவில் டாப் 50 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்து 48-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

we-r-hiring

ஜிம்பாப்வே தொடரில் ருத்ரதாண்டவம்
சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், இத்தொடரில் மொத்தம் 151 ரன்களைக் குவித்து அசத்தினார். இவரது சீரான மற்றும் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக இத்தொடருக்கான ‘தொடர் நாயகன்’ (Man of the Series) விருதும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டது.

‘மேலே ஏறி வாரேன்’ – எகிறிய தரவரிசை!
ஜிம்பாப்வே தொடரில் அவர் காட்டிய அதிரடி ஆட்டமே ஐசிசி தரவரிசையில் இந்த பிரம்மாண்ட பாய்ச்சலுக்குக் காரணமாக அமைந்தது. ஒரே தொடரின் மூலம் 230 இடங்களை முந்தி, 48-வது இடத்திற்கு முன்னேறியுள்ள வைபவ் சூர்யவன்ஷியின் இந்த வேகமான வளர்ச்சி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் விளையாட்டு விமர்சகர்களிடையேயும் பெரும் வியப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தியும் பலன் இல்லை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்திலேயே நீடிக்கும் மேற்கிந்திய தீவுகள்!

MUST READ