உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘தி ஒடிஸி’ (The Odyssey) திரைப்படத்தைப் பார்த்த தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் ‘உலகநாயகனுமான’ கமல்ஹாசன், இப்படம் காலத்தைக் கடந்து நிற்கும் காவியம் எனப் பாராட்டி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் ‘தி ஒடிஸி’
கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காவியத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மாட் டேமன், டாம் ஹாலண்ட், செண்டயா, ஆன் ஹாத்வே உள்ளிட்ட உலகத்தர நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நோலனின் பிரத்யேகமான நான்-லீனியர் திரைக்கதை, பிரம்மாண்ட ஐமேக்ஸ் (IMAX) காட்சி அனுபவம் ஆகியவற்றால் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்களை இப்படம் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்தியாவிலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கமல்ஹாசனின் பாராட்டுப் பதிவு
திரைப்படத்தைப் பார்த்த பின் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஹோமர் அதை கனவு கண்டார்; நோலன் அதைத் துணிச்சலுடன் திரையில் கொண்டு வந்துள்ளார். நான் அதை மனதாரப் பாராட்டுகிறேன். திரையுலகின் பிள்ளைகளே, இந்தப் படம் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கும் ஒரு காவியம். கட்டாயம் திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படைப்பு. ‘தி ஒடிஸி’ தனது பிரம்மாண்டமான பயணத்தை உலகம் முழுவதும் தொடரும் வேளையில், அதற்கான எனது பாராட்டு இந்தியத் திரையரங்குகளில் ரசிகர்களைச் சென்றடையும்.” உலக சினிமா ஜாம்பவான் கிறிஸ்டோபர் நோலனின் இந்த மாபெரும் படைப்பைக் கமல்ஹாசன் வெகுவாகப் பாராட்டியுள்ள இந்தப் பதிவு, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி சினிமா வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் ‘ராமாயணா’: ரசிகர்களைக் கட்டிப்போட்ட அசத்தலான ட்ரெய்லர் வெளியீடு!
