Homeசெய்திகள்விளையாட்டு2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்: 12 மைதானங்கள் அறிவிப்பு - தென்னாப்பிரிக்காவில் 24 ஆண்டுகளுக்குப்...

2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்: 12 மைதானங்கள் அறிவிப்பு – தென்னாப்பிரிக்காவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு திருவிழா!

-

- Advertisement -

ஐசிசி-யின் 14-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை

we-r-hiring

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் இந்த பிரம்மாண்ட கிரிக்கெட் தொடர், மொத்தம் 12 மைதானங்களில் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில்!

கடந்த 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 24 ஆண்டுகள் கழித்துத் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மீண்டும் நடைபெறவுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள 8 முக்கிய மைதானங்களில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன:

  1. வாண்டரர்ஸ் மைதானம் – ஜோகன்னஸ்பர்க்

  2. செஞ்சுரியன் – ஷ்வானே

  3. நியூலேண்ட்ஸ் மைதானம் – கேப் டவுன்

  4. கிங்ஸ்மீட் மைதானம் – டர்பன்

  5. செயின்ட் ஜார்ஜஸ் பார்க் – கெபெர்ஹா

  6. மங்கவுங் ஓவல் – ப்ளோம்ஃபோன்டைன்

  7. போலண்ட் பார்க் – பார்ல்

  8. பஃபலோ பார்க் – கு-கோம்போ சிட்டி

ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும் மைதானங்கள்

போட்டிகளை இணைந்து நடத்தும் ஜிம்பாப்வே நாட்டில் 3 மைதானங்களிலும், நமீபியாவில் 1 மைதானத்திலும் ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஜிம்பாப்வே (3 மைதானங்கள்):

  • ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் – ஹராரே

  • குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் – புலவாயோ

  • ஃபாலே மோசி-ஓவா-துன்யா சர்வதேச கிரிக்கெட் மைதானம் – விக்டோரியா ஃபால்ஸ்

நமீபியா (1 மைதானம்):

  • நமீபியா கிரிக்கெட் மைதானம் – விண்ட்ஹோக்

“மேகேதாட்டு அணை திட்டத்திற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்!” – தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

 

MUST READ