Homeசெய்திகள்விளையாட்டுவிளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று...

விளையாட்டுத் துறையில் கலக்கும் மாணவிகள்: மதுக்கரை குறுமைய தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

-

- Advertisement -

கோவை மாவட்டம் மதுக்கரை குறுமைய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

தடகள

we-r-hiring

இப்போட்டிகளில் கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

தடைகளைத் தாண்டி சாம்பியன் பட்டம்:

ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம் (Relay), குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகளில் மாணவிகள் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில், அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

கல்வியாளர் நித்யா ராஜ்குமார் பாராட்டு:

மாணவிகளின் இந்தச் சாதனை குறித்து கல்வியாளர் நித்யா ராஜ்குமார் தெரிவிக்கையில்:

“மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் அதிக ஆர்வத்துடன் பங்கேற்று தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து தங்களை நிரூபித்து வருகின்றனர்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையில் சரியான ஊக்கமும் பயிற்சியும் அளித்தால், அவர்களால் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் சாதனைகளைப் படைக்க முடியும்.

மாணவிகளின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தனித்திறமையை உலகிற்கு வெளிப்படுத்திய இந்தத் தடகளப் போட்டி, பெண் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் உயர்விற்கும் விளையாட்டின் முக்கியத்துவம் எந்த அளவிற்கு அவசியமானது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது.

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் வினோதம்: காணிக்கையாக வந்த குழந்தைகளை ஏலம் விடும் திருவிழா! விடிய விடிய கம கம கறி விருந்து!

MUST READ