Homeசெய்திகள்தமிழ்நாடுஎம்எஸ்எம்இ மின்கட்டணக் குறைப்பு மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பது அவசியமானது; பொருளாதார நிபுணர் சுப்பிரமணியன் கருத்து!

எம்எஸ்எம்இ மின்கட்டணக் குறைப்பு மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பது அவசியமானது; பொருளாதார நிபுணர் சுப்பிரமணியன் கருத்து!

-

- Advertisement -

புதிய அரசு மற்றும் புதிய முதலமைச்சர் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக பட்ஜெட் மீதான பொருளாதார நிபுணர்களின் பார்வைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்துப் தனியார் ஊடகத்திற்குப் பொருளாதார நிபுணர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எம்எஸ்எம்இ மின்கட்டணக் குறைப்பு மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பது அவசியமானது; பொருளாதார நிபுணர் சுப்பிரமணியன் கருத்து!

we-r-hiring

​புதிய அரசின் மீதான எதிர்பார்ப்புகளும் விவசாயிகளின் கோரிக்கைகளும்
​ஒரு புதிய அரசு, புதிய முதலமைச்சர் மற்றும் புதிய நிதி அமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போதைய பட்ஜெட் மீது பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவுவதாகப் பொருளாதார நிபுணர் சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

குறிப்பாக, முந்தைய அரசு விட்டுச்சென்ற இரட்டை இலக்க வளர்ச்சிப் (Double Digit Growth) பாதையை இந்த அரசு எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. விவசாயிகளைப் பொறுத்தவரை, முழுமையான கடன் தள்ளுபடி மற்றும் நெல், கரும்பு போன்றவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) உயர்வு ஆகியவை குறித்த நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு இந்த பட்ஜெட் எத்தகைய தீர்வை வழங்கியுள்ளது என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது என்றார்.

எம்எஸ்எம்இ துறையும் மின் கட்டணச் சிக்கல்களும்
​தமிழகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் வலியுறுத்தினார். ஒரு பொருள் உற்பத்தியில் சுமார் 10% வரை மின்சாரத்துக்காகவே செலவிடப்படுவதாகவும், குறிப்பாக ‘பீக் ஹவர்’ (Peak Hour) கட்டணங்களால் சிறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும் என்றார்.

​வெளிநாட்டு முதலீடுகளை (FDI) ஈர்ப்பதற்கான அவசரத் தேவைகள், ​ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கடந்த சில மாதங்களாகத் தமிழகத்திற்குள் வரக்கூடிய நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) சற்றுக் குறைந்துள்ளதாகத் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த, நிலம், மின்சாரம், வேலைவாய்ப்பு மற்றும் மூலதன மானியங்கள் (Subsidies) போன்ற சலுகைகளை அளிப்பதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வகையிலான தெளிவான மற்றும் உறுதியான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“11 லட்சம் கோடி கடன் சுமை; எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?” – தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

MUST READ