Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக அரசின் முதல் பட்ஜெட் - கடன் சுமை வெடிக்கும் ஆபத்தா? தேர்தல் வாக்குறுதிகள் வெறும்...

தவெக அரசின் முதல் பட்ஜெட் – கடன் சுமை வெடிக்கும் ஆபத்தா? தேர்தல் வாக்குறுதிகள் வெறும் ஏட்டுச் சுவடிகளா?

-

- Advertisement -

மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், தமிழகத்தின் அதலபாதாள நிதிநிலை மற்றும் எதிர்காலச் சவால்கள் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தின் உண்மையான நிதிநிலை மற்றும் சப்பக்கட்டு நியாயங்கள் குறித்து முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி திரு. ரங்கராஜ் சேகர் அவர்கள் வெளியிட்டுள்ள அனல் பறக்கும் சிறப்புப் பகுப்பாய்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புச் செய்தி- தவெக அரசின் முதல் பட்ஜெட் - கடன் சுமை வெடிக்கும் ஆபத்தா? தேர்தல் வாக்குறுதிகள் வெறும் ஏட்டுச் சுவடிகளா?

we-r-hiring

நிதிச்சுமையின் கோர முகம்: அன்றாடச் செலவுக்கே கையேந்தும் நிலை, புதிய அரசாங்கமும் நிதித்துறையும் தாக்கல் செய்துள்ள இந்த முதல் பட்ஜெட்டில், புதிய திட்டங்களை அறிவிக்கத் தற்போதைய நிதிநிலை அறவே இடமளிக்கவில்லை என்பது கசப்பான உண்மையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு தனது அன்றாடச் சாதாரண செலவுகளுக்கே கூட கடன் வாங்க வேண்டிய இக்கட்டான மற்றும் தலைகுனிவான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது பட்ஜெட் மூலம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த கால ஆட்சிகளில் மலைபோல் குவிக்கப்பட்ட கடன் சுமையால் மாநிலம் திணறிக்கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் தனிநபர் வருமானமும் உயர்ந்திருப்பதாகப் பீற்றிக்கொள்ளப்படுகிறது. ஆனால், அரசின் சொந்த வரி வருமானம் மட்டும் பின்தங்கி நிற்பது ஏன்? இதுவே தமிழகத்தை நிரந்தரக் கடன் வலையில் சிக்கவைக்கும் ஆபத்தான போக்கு என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தேர்தல் வாக்குறுதிகள்: மக்களை ஏமாற்றும் வெற்றுக் கனவுகளா, தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை எளிதில் கவரப் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன; ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்றுவதில் சாக்குப்போக்குகளும் நடைமுறைச் சவால்களும் முன்வைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. மறுபுறம், பல முக்கியத் துறைகளில் தனியாரை அனுமதிப்பதால் நிர்வாகம் சீராகலாம் என்றாலும், அதன் ஒட்டுமொத்தக் கட்டணச் சுமை இறுதியில் சாமானிய மக்களின் தோள்மீதுதான் சுமத்தப்படும் என்ற ஆபத்து குறித்து அரசு எந்த அளவுக்குச் சிந்தித்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

கிராமப்புறங்களின் தவிப்பும் பொது விநியோகத் தரம் தாழ்ந்த நிலையும் பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு குறித்து வார்த்தைகளால் அமுதசுரபி அள்ளப்பட்டாலும், நாளுக்கு நாள் நசுங்கிவரும் கிராமப்புற பொருளாதார நெருக்கடியை மீட்க என்ன தீர்வு? கிராமப்புற மக்களின் அடிவயிற்றுத் தீயை அணைக்கப் பயன்படும் பொது விநியோகத் திட்டத்தை (PDS) காலத்திற்கேற்ப நவீனப்படுத்தாமல், சப்பக்கட்டு கட்டமைப்பு மாற்றங்களால் என்ன பயன்? என்று ரங்கராஜ் சேகர் அவர்கள் சாட்டையடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அச்சமூட்டும் யதார்த்தம்:
மேடைகளில் முழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கடன் சுமைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் மாநிலத்தைக் காப்பாற்றப் போவது எப்படி? தவெக அரசின் உண்மையான திறமைக்கு இதுவே முதல் அக்னிப் பரீட்சை!

“வேளாண் பட்ஜெட் ஒரு நாடகம்”: தார்ப்பாயாவது கொடுத்து விவசாயிகளுக்கு உதவட்டும்! – எடப்பாடி பழனிசாமி சாடல்!

MUST READ