Homeசெய்திகள்தமிழ்நாடுஅடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? - பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி! ...

அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? – பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி! ​

-

- Advertisement -

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல், எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மீது தொடர்ச்சியாகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரான திரு. பொன்ராஜ் தமிழக அரசின் நிர்வாகம் குறித்தும், தற்போதைய பட்ஜெட் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? - பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி!  ​​நக்கீரன் கோபால் மீது பாயும் வழக்குகள்: மீண்டும் எமர்ஜென்சி காலமா?
​ மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகரும் அரசியல் விமர்சகருமான பொன்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் ஊடக சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று சாடியுள்ள அவர், கடந்த காலத்தில் பல்வேறு அரசுகளின் முறைகேடுகளைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்திய நக்கீரன் கோபால் மீது காவல்துறை மூலம் அடக்குமுறையைக் கையாள்வது ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கூட நாட்டுக்காகச் சில ஆளுமைமிக்க நல்ல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும், ஆனால் தற்போதைய ஆட்சியில் அராஜகமும் சர்வாதிகாரமும் மட்டுமே மிஞ்சி நிற்பதாகவும் அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார்.அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? - பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி!  ​

​பட்ஜெட்டும் வெற்று அறிவிப்புகளும்!
​தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் முற்றிலும் ஏமாற்றம் அளிப்பதாகவும், இது மக்களை ஏமாற்றும் ஒரு “வெறும் ஸ்டிக்கர் பட்ஜெட்” மட்டுமே என்றும் பொன்ராஜ் சாடியுள்ளார். ​தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் குறைந்தது 10% கூட தற்போதைய பட்ஜெட்டில் முறையாக நிறைவேற்றப்படவில்லை. ​வைகை, மேட்டூர், தாமிரபரணி போன்ற நதிகளைத் தூய்மைப்படுத்த வெறும் ₹15 கோடி ஒதுக்கியிருப்பது எங்கு போய்ச் சேரும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ​ஆண்டுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடக்கும் நிலையில், தாய்மாமன் சீர்வரிசைத் திட்டத்தின் கீழ் வெறும் 70,000 பேருக்கு மட்டும் உதவித்தொகை வழங்குவது “யானை பசிக்கு சோளப்பொரி” போன்றது என்று வர்ணித்துள்ளார்.

we-r-hiring

​மதச்சார்பின்மை கோட்பாடும் முரண்பாடுகளும்!
​அரசு அலுவலகங்களும், அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளும் எந்தவொரு மதத்திற்கும் சார்பாக இருக்கக் கூடாது என்ற அடிப்படை நெறிமுறை மீறப்படுவதாக பொன்ராஜ் சுட்டிக் காட்டினார். பட்ஜெட் நகல்களை ஆந்திராவிற்கு எடுத்துச் சென்று திருப்பதியில் ஆசி பெற்றுவருவது மற்றும் ஜெபமாலையுடன் பட்ஜெட் வாசிப்பது போன்ற செயல்கள் மதச்சார்பற்ற அரசுக்கு அழகல்ல என்றும், எம்.ஜி.ஆர் காட்டிய நெறிமுறைகளை ஆட்சியாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.அடக்குமுறை அரசியலும், வெடிக்கும் எதிர்ப்புகளும்: அடுத்த டார்கெட் நக்கீரன்? - பொன்ராஜ் அதிர்ச்சிப் பேட்டி!  ​

​எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளிக்க அஞ்சும் அரசு!
​சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரில் பதிலளிக்காமல், அமைச்சர்களைக் கொண்டு மறைக்க முயல்வது ஆளுங்கட்சியின் பயத்தையே காட்டுகிறது. 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை எட்டப் போவதாகக் கூறும் அரசு, அதற்கான எவ்வித அடிப்படை பொருளாதாரக் கட்டமைப்பையும் (Economic Foundation) பட்ஜெட்டில் உருவாக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ​ஒட்டுமொத்தத்தில், மக்களுக்குச் நல்லது செய்வதை விட்டுவிட்டு, காவல்துறையைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்ப்புக் குரல்களை அடக்குவதிலேயே அரசு குறியாக உள்ளதாகப் பொன்ராஜ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பி.ஆர். சுந்தரைக் கைது செய்வதா? – தவெக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்!

MUST READ