Homeசெய்திகள்மாவட்டம்தூத்துக்குடியில் பரபரப்பு: தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் மிரட்டல்!செல்போன் பறிக்க கூலிப்படை ஏவப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு...

தூத்துக்குடியில் பரபரப்பு: தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் மிரட்டல்!செல்போன் பறிக்க கூலிப்படை ஏவப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு – எஸ்பியிடம் புகார்!

-

- Advertisement -

பதவி பெற ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்ய வற்புறுத்தியதாக மனு – ஆறுமுகநேரியில் பரபரப்பான அரசியல் சூழல்தூத்துக்குடியில் பரபரப்பு: தவெக பெண் நிர்வாகிக்கு பாலியல் மிரட்டல்!செல்போன் பறிக்க கூலிப்படை ஏவப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு – எஸ்பியிடம் புகார்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி ஒருவர், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுப்பதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) அளித்துள்ள புகார் மனு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

திட்டமிட்ட செல்போன் பறிப்பு சதி:
பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகியிடம் இருந்த செல்போனைப் பறிப்பதற்காகக் கூலிப்படை ஏவப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்சி நிர்வாகி ஒருவருக்கும், அந்தப் பெண் நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரிடமிருந்த ஆதாரங்களைக் கைப்பற்ற இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 26 அன்று இரவு, திட்டமிட்டபடி செல்வா புனிதராஜ் என்பவரால் அந்தப் பெண்ணின் செல்போன் பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் நாடகமாடிய சிபாஷ் என்பவரைப் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். செல்போனைப் பறித்த மற்றொரு நபர் ஏற்கனவே பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் செயல்பட்ட முக்கியப் புள்ளியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

‘அட்ஜஸ்ட்மென்ட்’ மிரட்டல் மற்றும் ஆபாச டார்ச்சர்: காவல் கண்காணிப்பாளரிடம் அந்தப் பெண் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

“கட்சியில் உயர்பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி, சில முக்கிய நிர்வாகிகள் என்னிடம் இரட்டை அர்த்தத்திலும் ஆபாசமாகவும் பேசி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். ‘கட்சியில் பெரிய பொறுப்பு வேண்டும் என்றால் நிர்வாகிகளை அனுசரித்துத் (அட்ஜஸ்ட்மென்ட்) தான் செல்ல வேண்டும்’ என மிரட்டினார்கள்.  வாட்ஸ்அப் வழியாகத் தொடர்ந்து ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோ கால்களை அனுப்பித் தொந்தரவு செய்தனர்.”

அமைச்சரின் மௌனமும் உயிருக்கு ஆபத்தும்:
இந்த விவகாரம் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் நேரில் புகார் அளித்தும், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னிடம் உள்ள ஆபாச உரையாடல்கள் மற்றும் ஆதாரங்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில், முக்கிய நிர்வாகிகள் சிலர் தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், வீட்டைச் சுற்றி மர்மக் கார்கள் சுற்றி வருவதாகவும் கூறியுள்ள அவர், தனது செல்போனை மீட்டுத் தந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கட்சி நிர்வாகிகள் மறுப்பு – பதிலடிப் புகார்:
இதனிடையே, தவெக மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளனர். புகார்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், அந்தப் பெண் தனது தனிப்பட்ட பிரச்சினையைத் திசைதிருப்பவே அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் கூறி ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பதிலடிப் புகார் அளித்துள்ளனர்.

தூத்துக்குடியில் தவெக பெண் நிர்வாகிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம், கட்சி அமைப்புகளில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும், அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

“குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும்!” – கள்ளக்குறிச்சி கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் பத்மஜா வலியுறுத்தல்!

MUST READ