Homeசெய்திகள்கட்டுரைதற்கொலைப்படை மிரட்டல்: தீவிரவாதப் பாதையில் அதிமுக…? -அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்

தற்கொலைப்படை மிரட்டல்: தீவிரவாதப் பாதையில் அதிமுக…? -அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்

-

- Advertisement -

ஜனநாயகத்தில் தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் மக்கள் வழங்கும் தீர்ப்பு. ஆனால், தேர்தல் தோல்வியையும், மக்கள் செல்வாக்கு சரிவதையும் ஜீரணிக்க முடியாமல், ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்குப் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுப்பதும், தொண்டர்களைத் ‘தற்கொலைப்படையாக’ மாற்றுவோம் எனப் பேசுவதும் ஜனநாயகத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலாகும்.

we-r-hiring

அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள காணொளி மற்றும் பேச்சுக்கள், ஒரு பொறுப்பான அரசியல் கட்சியின் எல்லையைத் தாண்டி தீவிரவாத இயக்கத்தின் தொனியை வெளிப்படுத்தியுள்ளன.

தற்கொலைப்படை மிரட்டல்…!

அதிமுகவை அழிக்க நினைத்தால் தற்கொலைப்படையாக மாறுவோம் என்றும், அடுத்த சுதந்திர தினத்தில் விஜய் உயிரோடு இருப்பாரா எனத் தெரியாது என்றும் ஆர்.பி. உதயகுமார் விடுத்துள்ள பகிரங்க மிரட்டல் அப்பட்டமான வன்முறைத் தூண்டலாகும். தூத்துக்குடி ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் நடிகை த்ரிஷாவை இழுத்து ஆபாசமாகப் பேசிய அதே நபர், தற்போது அடுத்தகட்டமாக முதலமைச்சரின் உயிருக்கே உலைவைக்கும் வகையில் பேசியிருப்பது அப்பட்டமான சட்டவிரோதம். М.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் ஜனநாயக வழியில் நடத்தப்பட்ட ஒரு பேரியக்கத்தை, இன்று வீதி ரவுடிகளைப் போலவும், தீவிரவாதக் குழுவைப் போலவும் மாற்றியிருப்பது எந்த வகையில் நியாயம்?

சொந்தப் பிள்ளைகளை அனுப்புவார்களா?

அதிமுகவினர் அதிருப்தியடைந்து தவெக-விற்கோ அல்லது மாற்று இயக்கங்களுக்கோ செல்கிறார்கள் என்றால், அதற்கு யார் பொறுப்பு? கட்சியைத் தன் குடும்பத்தின், தன் மகனின், தன் அல்லக்கைகளின் பிடிக்குள் முடக்கி வைத்துக்கொண்டு, உட்கட்சி ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையே இதற்கு முழுமுதற் பொறுப்பு.

அதைத் தட்டிக் கேட்கத் துப்பில்லாத ஆர்.பி. உதயகுமார், தொண்டர்களைத் தற்கொலைப்படையாக மாறுவோம் என மிரட்டுகிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்து பல நூறு கோடிகளில் சொத்து சேர்த்து, செல்வச் செழிப்பில் மிதக்கும் ஆர்.பி. உதயகுமார் தனது சொந்தப் பிள்ளைகளையோ, எடப்பாடி பழனிசாமியும் அவரது அல்லக்கைகளும் தங்களது வாரிசுகளையோ தற்கொலைப்படையாக அனுப்புவார்களா?

தலைவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளிலும் சொகுசு மாளிகைகளிலும் வாழும்போது, ஏழை எளிய அதிமுக தொண்டன் மட்டும் எதற்காகத் தன் எதிர்காலத்தையும் குடும்பத்தையும் இழந்து தற்கொலைப்படையாக மாற வேண்டும்? தொண்டர்களின் உழைப்பிலும் வியர்வையிலும் சுகபோகங்களை அனுபவித்த தலைவர்கள், இப்போது தங்கள் சுயநலப் பிழைப்புக்காகத் தொண்டர்களை வன்முறைக்குத் தூண்டி பலிகடா ஆக்க நினைப்பது அப்பட்டமான அயோக்கியத்தனம்.

மக்கள் நிராகரித்த விரக்தியா?

வன்முறையாகவும், தீவிரவாதப் பாணியிலும், ஆபாசமாகவும், வக்கிரமாகவும் பேசி முதலமைச்சர் விஜய்யின் மன உறுதியை (Moral) குலைத்துவிடலாம் என இவர்கள் உளவியல் ரீதியாகத் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஆனால், ஜனநாயகத்தில் மக்கள் தங்களை அடியோடு நிராகரித்துவிட்டார்கள் என்ற கசப்பான உண்மையை இவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்? மக்களால் புறக்கணிக்கப்பட்டு அரசியல் அநாதையாகி நிற்கும் விரக்தியில்தான் இத்தகைய வக்கிர வார்த்தைகளும் வெறித்தனமான மிரட்டல்களும் வெளிவருகின்றன.

திமுக ஆட்சியின்போது பதுங்கல்…!

கடந்த திமுக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல்கள், சட்டம்-ஒழுங்கு தோல்விகள் புரையோடிப்போய் தமிழகமே சீரழிந்தபோது, இந்த ஆர்.பி. உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் எங்கே போனார்கள்? 2021 முதல் திமுக அரசுடன் மறைமுகக் கள்ளக்கூட்டணியும், அண்டர்ஸ்டாண்டிங் அரசியலும் வைத்துக்கொண்டு அமைதி காத்த இவர்கள், தவெக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் முடிவதற்குள்ளேயே முதல் நாளில் இருந்தே எகிறிக் குதிப்பது ஏன்?

திமுக அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் வருடிக்கொடுத்துவிட்டு, மக்கள் ஜனநாயக ரீதியாக ஆட்சி மாற்றத்தைக் கொடுத்த பிறகு இத்தகைய வக்கிரங்களையும் கொலை மிரட்டல்களையும் கக்குவது யாருக்கான சேவை? திமுகவின் கொத்தூஸ்களாகச் செயல்படும் அதிமுகவின் சில தலைவர்கள், தவெக வளர்ச்சியைப் பார்த்துப் பதறுவது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

தமிழக அரசியல் களம் தனிநபர் ஆபாசப் பேச்சுகளாலும், வன்முறை மிரட்டல்களாலும் சீரழிவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒரு மாநில முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய ஆர்.பி. உதயகுமார் மீது சாதாரணப் பிரிவுகளில் பெயரளவில் வழக்குப் போடாமல், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகளை மக்கள் மன்றத்தில் சந்திக்கத் திராணியில்லாமல், பயங்கரவாத மிரட்டல்களை உமிழும் இத்தகைய தலைவர்களுக்குச் சட்டம் தன் இரும்புக்கரத்தால் பாடம் புகட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

“என்னை விட்டுவிடாதீர்கள்!” – முதலமைச்சர் விஜய்யின் கெஞ்சல்: நிர்வாக சீர்கேட்டால் வந்த பயம் – சுகுணா திவாகர்

MUST READ