Homeசெய்திகள்கட்டுரைஈவிஎம் வேண்டாம், மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தை நாட திமுக திட்டம்!

ஈவிஎம் வேண்டாம், மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்: உச்ச நீதிமன்றத்தை நாட திமுக திட்டம்!

-

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) பயன்பாடு குறித்த சந்தேகங்களும், தேர்தல் ஆணயத்தின் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட வாக்குச்சீட்டு (Ballot Paper) முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

we-r-hiring

எந்திரங்களில் முறைகேடுகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால், மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்து வருகிறது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள்:

சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு கட்ட ஆய்வுகளில், கொளத்தூர் தொகுதியில் சரிபார்க்கப்பட்ட 14 எந்திரங்களில் 5-க்கும் மேற்பட்ட எந்திரங்களில் கோளாறுகள் இருந்தது கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களின் பேட்டரிகள், விவிபேட் (VVPAT) சுருள்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உரிய பராமரிப்பின்றி கரையான் அரித்து கிடந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மேலும், மின்னணு எந்திரங்களின் பேட்டரி ஆயுட்காலம் சில மாதங்களிலேயே முடிவடைவதால், தேர்தல் முடிந்த பிறகு நீண்ட காலத்திற்கு அவற்றை வைத்து மறுசரிபார்ப்பு செய்வது சாத்தியமற்றதாக மாறுகிறது.

வாக்குச்சீட்டு முறையின் அவசியமும் சட்டப் போராட்டமும்:

ஒரு மாணவர் எழுதும் தேர்வுத் தாள் அடுத்த கல்வி ஆண்டு வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு மறுமுறையீடு செய்யும் வசதி இருப்பது போல, ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யும் மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளரின் வாக்குச் சீட்டும் ஐந்து ஆண்டுகளுக்குப் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். மின்னணு எந்திரங்களின் சாஃப்ட்வேர் மற்றும் அல்காரிதம் குறித்த எந்தவொரு தகவலும் வெளிப்படையாக இல்லை.

எனவே, ஜனநாயகத்தைக் காக்கவும் தேர்தலின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர திமுக சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இலங்கை அகதிகள் விவகாரம்: தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சவுக்கு சங்கர் வலியுறுத்தல்!

MUST READ