மேற்காசியாவில் ஏற்கனவே அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ரத்தமும் சதையுமாகப் போர் களம் கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கத்தார் நாட்டின் மீது ஈரான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் தீப்பொறியைப் பற்றவைத்துள்ளது. தங்கள் நாட்டுப் போர் விமானிகளையும், விமானிகளையும் கத்தார் அரசு சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைத்து சித்திரவதை செய்வதாக ஈரான் முழங்கியுள்ள போர்க்குரல், வளைகுடா பிராந்தியத்தில் அடுத்த கட்ட போருக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.


கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய நயவஞ்சகத் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமீனி உள்பட நூற்றுக்கணக்கான ராணுவத் தலைவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்தில் கோரத் தாண்டவமாடிய ஈரான், அமெரிக்காவின் அத்துமீறல் தளங்களை அடித்து நொறுக்கியது. இந்தக் கடும் மோதல்களின் உச்சக்கட்டமாக, கடந்த மார்ச் மாதம் கத்தார் நாட்டின் வான்வெளியில் ஈரானின் அதிநவீன ‘சூ-24’ (Su-24) ரகப் போர் விமானங்கள் குறிவைத்து வீழ்த்தப்பட்டதாகத் தற்போது அதிரடித் தகவல்கள் கசிந்துள்ளன.
ஈரானின் ஆயுதப்படை பிரிவுத் தலைவர் முகமது பகீர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் விவரித்துள்ள விவரங்கள் உலக நாடுகளைப் பதற வைத்துள்ளன: கத்தார் படைகளால் வீழ்த்தப்பட்ட விமானங்களில் பறந்த ஜாவேத், தாஷ்தியான் மற்றும் உம்ரான் ஆகிய மூன்று ஈரான் போர் விமானிகளை கத்தார் ராணுவம் கொடூரமாகக் கைது செய்துள்ளது. துணிச்சலான இந்த மூன்று வீரர்களும் கடந்த ஆறு மாதங்களாகக் கத்தாரின் ரகசியத் தடுப்புக் காவலில் கொடூரமான சூழலில் வாடி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் நாட்டின் இறையாண்மையைக் காக்கச் சென்ற வீரர்களை உடனடியாக நிபந்தனையின்றிக் விடுதலை செய்ய வேண்டும் என ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை, கத்தாரை நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல் குற்றச்சாட்டை கத்தார் அரசு உடனடியாகவும் மிரண்டுபோயும் மறுத்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் காவலில் ஈரான் விமானிகள் யாரும் இல்லை; அவர்கள் கூறுவது அப்பட்டமான பொய்,” என்று கைவிரித்துள்ளார். மேலும், அந்தச் சமயத்தில் ஈரான் விமானங்கள் கத்தார் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் எச்சரித்து அனுப்பியதாகக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறது கத்தார் அரசு. போரைத் தணிப்பதற்கான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடப்பதாகப் பந்தா காட்டிக்கொண்டே, மறுபுறம் அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல்பட்டு ஈரான் வீரர்களை கத்தார் சிறைபிடித்துள்ளதாக ஈரான் தரப்பு கொந்தளிக்கிறது.
அமெரிக்காவின் எச்சரிக்கைகளையும் மீறி, தன் நாட்டு வீரர்களை மீட்க ஈரான் ராணுவம் கத்தார் மீது நேரடித் தாக்குதலைத் தொடுமா என்ற பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கி, உலக நாடுகள் பொருளாதாரச் சரிவை நோக்கி நகரும் வேளையில், ஈரான் – கத்தார் இடையேயான இந்த நேரடி மோதல் மேற்காசியாவை முழுமையான பேரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஈராக் – சிரியா புதிய எண்ணெய் குழாய் பாதை திட்டம்: செயல்பாட்டிற்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்!
