தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் விவகாரம், அரசின் சுற்றறிக்கைகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ‘திராவிடம் 100’ ஊடகத்தில் பேசிய உரையின் தொகுப்பு:


எம்.எல்.ஏ.க்களுக்கு காரும், திமுகவின் நிலைப்பாடும்:
சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார்கள் வழங்கும் திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உட்படத் திமுகவின் 59 உறுப்பினர்களும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், பாமக சட்டமன்ற உறுப்பினரும் தங்களுக்கு அரசு கார் வேண்டாம் எனத் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். நிதி பற்றாக்குறை நிலவுவதாகக் கூறிவரும் சூழலில், உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவதற்கான தொகையைச் சேமித்து, விவசாயிகளின் பயிர் கடன் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.
அதேநேரத்தில், “லஞ்சம் வாங்காமல் இருப்பதற்குத்தான் கார்கள் வழங்கப்படுகின்றன” என அமைச்சர் ஆத அர்ஜுனா கூறியிருப்பது ஒரு புதிய சித்தாந்தமாக இருக்கிறது. கார் கொடுத்தால் லஞ்சம் ஒழிந்துவிடும் என்றால் அரசு அதிகாரிகளுக்கும் தனியார் துறையினருக்கும் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுகிறது.
ஆதாரங்களை மறைப்பது சட்டப்படி குற்றமாகும்:
கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் தொடர்பான கோப்புகள் தன் மேஜையிலேயே இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். ஒரு குற்றம் நடந்ததற்கான ஆதாரம் கையில் இருந்தால், அதைச் சட்டப்படி உடனடியாகப் பொதுவெளியில் வெளியிடுவதோ அல்லது நடவடிக்கை எடுப்பதாகவோ இருக்க வேண்டும். அதை விடுத்து, ‘நேரம் வரும்போது தருவேன்’ என வைத்திருப்பது சட்டப்படி குற்றத்திற்குச் சமமான செயலாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்ச்சை சுற்றறிக்கையும் அரசின் அவசரப் பின்னடைவும்:
கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதும், பின்னர் அதில் ‘சொற்கள் தவறாக இடம்பெற்றுவிட்டன’ எனக்கூறி அதைத் திரும்பப் பெற்றதும் அரசின் நிர்வாகக் குளறுபடியைக் காட்டுகிறது. ஜனநாயக நாட்டில் அறப்போராட்டங்களில் பங்கேற்பது அடிப்படை உரிமையாகும்.
தகைசால் தமிழர் விருதும் அரசியல் கணக்குகளும்:
தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய சான்றோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘தகைசால் தமிழர் விருது’, இந்த முறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கிருஷ்ணசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதிலும் காங்கிரஸ் கட்சியைத் திருப்திப்படுத்துவது மற்றும் குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளைப் பெறுவது போன்ற அரசியல் உள்நோக்கங்களே ஒளிந்திருக்கின்றன.
தொகுதி மறுவரையறை: ஆளும் தவெக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கப்போகிறது – தோழர் மருதையன் விளாசல்!
