KGF: Chapter 2 படத்திற்குப் பிறகு யஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிகப்பெரிய திரைப்படமான ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு யஷ் மீண்டும் திரையில் தோன்றுவதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


கன்னட திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் கவனம் பெற்றுள்ள ‘டாக்ஸிக்’ படத்தை கீதூ மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், ஆக்ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யஷின் மாஸ் அவதாரம்!
படத்தில் யஷ் மாறுபட்ட தோற்றத்திலும், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. KGF படங்களில் ராக்கி பாயாக ரசிகர்களை கவர்ந்த யஷ், ‘டாக்ஸிக்’ படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பது படத்தின் மீதான முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
நயன்தாரா – கியாரா அத்வானி கூட்டணி
படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக யஷ் மற்றும் நயன்தாராவின் கூட்டணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று முதல் திரையரங்குகளில்!
நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வந்த ‘டாக்ஸிக்’ இன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அதிகாலை முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றனர். மிகப்பெரிய திரை அனுபவம், பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் மற்றும் யஷின் மாஸ் பெர்ஃபார்மன்ஸ் என படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘KGF’ மூலம் இந்திய அளவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய யஷ், ‘டாக்ஸிக்’ மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைப்பாரா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘டாக்ஸிக்’ பூர்த்தி செய்யுமா? என்பதற்கான விடை இன்று திரையரங்குகளில் தெரிந்துவிடும்!
‘டாக்ஸிக்’ சென்னை ப்ரீ-ரிலீஸ் விழா! “தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து” – யஷ் உறுதி
