Homeசெய்திகள்சினிமா‘டாக்ஸிக்’ சென்னை ப்ரீ-ரிலீஸ் விழா! “தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து” - யஷ் உறுதி

‘டாக்ஸிக்’ சென்னை ப்ரீ-ரிலீஸ் விழா! “தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து” – யஷ் உறுதி

-

- Advertisement -

யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்புக்கான முன்வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. கேவிஎன் புரடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

we-r-hiring

ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி திரைக்கு வருகிறது.

விழாவில் படக்குழுவினர் கூறிய முக்கிய அம்சங்கள்:

  • நடிகர் யஷ்: தமிழ் மக்களின் அளவில்லாத அன்பிற்கு தலைவணங்குவதாகத் தெரிவித்தார். ‘டாக்ஸிக்’ முற்றிலும் வித்தியாசமான உலகத்தையும், ரசிகர்களுக்குப் புதிய திரையனுபவத்தையும் தரும் என உறுதியளித்தார்.

  • இயக்குநர் கீது மோகன்தாஸ்: தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த யஷ்ஷிற்கு நன்றி தெரிவித்தார். இத்திரைப்படம் யஷ்ஷின் ‘2.0 வெர்ஷனாக’ இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

  • நடிகை கியாரா அத்வானி: சென்னைக்கு முதன்முறையாக வந்த அனுபவத்தையும், கிடைத்த வரவேற்பையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். நயன்தාරாவின் நடிப்பு மற்றும் மனிதநேயத்தைப் பாராட்டியவர், கீது மோகன்தாஸின் இந்திய சினிமா பங்களிப்பைப் போற்றினார்.

  • நடிகை ஹூமா குரேஷி: தமிழ் ரசிகர்கள் தன்னை ‘கண்ணம்மா’ என அன்போடு அழைப்பதை நினைவு கூர்ந்தார். கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் கியாரா அத்வானி அளித்த அசாதாரண உழைப்பைப் பாராட்டிப் பேசினார்.

  • நடிகை ருக்மிணி வசந்த்: யஷ்ஷின் ரசிகையாக இருந்து, தற்போது அவருடன் இணைந்து நடிக்கும் சக நடிகையாக மாறியுள்ள தனது பயணத்தின் சிறப்பைக் குறிப்பிட்டு தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

  • இயக்குநர் / பாடலாசிரியர் விக்னேஷ் சிவன்: இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்களை எழுதியுள்ளதாகக் கூறியவர், யஷ்ஷின் புகழ் ‘டாக்ஸிக்’ மூலம் உலகளவில் விரிவடையும் என வாழ்த்தினார்.

நயன்தாரா, தாரா சுதாரியா உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ‘டாக்ஸிக்’, திரையரங்குகளில் பிரம்மாண்டமான விருந்தாக இருக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

‘சிவாஜி’ கூட்டணி மீண்டும் இணையுமா? ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா!

MUST READ