Homeசெய்திகள்சினிமாஇசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!

இசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!

-

- Advertisement -

‘கல்யாண விருந்து’ பாடலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘டோரதி’ (Dorothy) திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இசைஞானியின் ‘ராஜா TRANCE’! எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ அப்டேட்!

பிசாசு, பீட்சா போன்ற வித்தியாசமான திரில்லர் பட வரிசையில் உருவாகி வரும் ‘டோரதி’ திரைப்படத்தின் இசைப் பணிகளை இசைஞானி இளையராஜா கவனித்து வருகிறார். முன்னதாக இப்படத்திலிருந்து வெளியான ‘கல்யாண விருந்து’ பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலானது. அந்தப் பாடலை வெளியிடும் போது “ராஜா சம்பவம்” எனக் குறிப்பிட்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியிருந்தார். இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார். அதில், “‘டோரதி’ திரைப்படத்தின் 2வது பாடல் நாளை வெளியாகிறது” எனத் தெரிவித்துள்ள அவர், இம்முறை இந்தப் பாடலை “ராஜா TRANCE” (Raja Trance) எனக் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

இசையமைப்பாளர் இளையராஜாவின் மெல்லிசைகளும் பின்னணி இசைகளும் கேட்பவர்களை வேறு ஒரு உணர்வு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ‘ட்ளான்ஸ்’ (Trance) பாணியில் அமைந்திருக்கும் என்பதால், நாளை வெளியாகவுள்ள இந்தப் பாடல் இசைப் பிரியர்களுக்கும் ரசிகர்களுக்கும் புதியதொரு இசை விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாப்ஸியின் ‘காந்தாரி’ திருட்டு கதையா? “படம் வரட்டும் புரியும்!” – சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த கனிகா தில்லான்!

MUST READ