Homeசெய்திகள்சினிமா"சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு... ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!" - வெற்றிமாறன் உருக்கம்

“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்

-

- Advertisement -

‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்த இயக்குநர் வெற்றிமாறன்!"சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு... ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!" - வெற்றிமாறன் உருக்கம்

‘செல்ஃபி’ படப் புகழ் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இயக்குநர் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராகப் (Creative Producer) பணியாற்றியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாநகரில் இதன் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், படம் குறித்தும் இயக்குநர் மதிமாறன் மற்றும் நடிகர் சூரி குறித்தும் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

we-r-hiring

“எனக்கு வெற்றிமாறன்னு பேர் வச்சதே இவங்க அப்பாதான்!”
விழாவில் பேசிய வெற்றிமாறன், இயக்குநர் மதிமாறனுக்கும் தனக்குமான நெகிழ்ச்சியான பிணைப்பைப் பற்றிப் பேசுகையில், “எனக்கு இந்த படம் மிகவும் ஸ்பெஷலானது. ஏன்னு கேட்டா இந்த படத்துடைய டைரக்டர் மதி என் மாமா பையன். எனக்கு ‘வெற்றிமாறன்’னு பேர் வச்சதே மதிமாறனுடைய அப்பாதான். நான் உதவி இயக்குநராக இருக்கும்போதே சினிமாவுக்கு வர விருப்பப்பட்டவன். இன்ஜினியரிங் முடிச்சதும் காலேஜ் அறியர்ஸ் எல்லாத்தையும் ஒரே செமஸ்டர்ல முடிச்சுட்டு வந்தான். ஒரு குறும்படம் எடுத்துட்டு வந்து, ‘எனக்குத் தகுதி இருந்தா மட்டும் வாய்ப்பு கொடுங்க’ன்னு நேர்மையா கேட்ட மனுஷன் அவன்.” என்றார்."சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு... ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!" - வெற்றிமாறன் உருக்கம்

“சூரி உடம்பை வருத்திக்கிறதைக் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் அன்பு வேண்டுகோள்
சூரியின் அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பு குறித்துப் பேசிய வெற்றிமாறன், “நான் இப்பதான் படம் பார்த்தேன். படம் ரொம்பவே நல்லா வந்திருக்கு. இது வெறும் ஸ்போர்ட்ஸ் படம் மட்டும் இல்லாம ரொம்ப விறுவிறுப்பா இருக்கு. அதுல சூரி பண்ணியிருக்கிற விஷயங்களையெல்லாம் பார்க்கும் போது, எவ்வளவு கஷ்டமான விஷயமா இருந்தாலும் அதைச் செய்யுறதுக்கு அவர் எப்பவும் ரெடியா இருக்காரு.” “சில சமயங்கள்ல மனசு சொன்னாலும் உடல் ஒத்துழைக்காது.

சில சமயம் உடம்பு ஃபிட்டா இருந்தாலும் மனசுல பயம் இருக்கும். ஆனா மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கக்கூடிய ஆள் சூரி. படத்துக்காக அவர் கையிலும் காலிலும் காயம் ஏற்படுத்திக்கிறதைப் பார்க்கும்போது, அந்த ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்னு எனக்குத் தோணுது. சூரி தன்னுடைய வளர்ச்சியை ரொம்ப மதிக்குறாரு; அந்த மதிப்புதான் இயக்குநர்கள் கேட்குறதைச் செய்து கொடுக்கக்கூடிய எண்ணத்தைக் கொடுத்திருக்கு.” என்று பாராட்டி வேண்டுகோள் விடுத்தார்.

‘ஆடுகளம்’ பாணியில் ஜி.வி. பிரகாஷின் மிரட்டலான இசை!
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பங்களிப்பு குறித்துப் பேசிய வெற்றிமாறன்,  “என்னுடைய ‘ஆடுகளம்’ படமும் ஒரு ஸ்போர்ட்ஸ் படம்தான். அந்தப் படத்துல ஜி.வி-யோட இசை ரொம்பப் பெரிய ரோல் பண்ணுச்சு. அதே மாதிரி இந்த ‘மண்டாடி’ படத்துலயும் அவரோட இசை மிகப்பெரிய பலமா இருக்கு. குறிப்பா பின்னணி இசை ரொம்ப ஸ்பெஷலா வந்திருக்கு. படத்தில் கடலில் நடக்கும் படகு போட்டிகள் வரும்போது நாமளும் கடலுக்குள்ளேயே இருக்குற மாதிரியான ஒரு உணர்வைத் தருது. இந்த மாதிரி படம் சிலருக்கு வாழ்க்கையில ஒருமுறை தான் அமையும். அதுக்காகப் படத்துல ஒர்க் பண்ண எல்லோருமே தங்களை முழுசா அர்ப்பணிச்சிருக்காங்க.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு... ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!" - வெற்றிமாறன் உருக்கம்

‘மண்டாடி’ படம் பற்றிய விவரங்கள்
கதைக்களம்:
கடலில் நடைபெறும் பாரம்பரிய படகுப் போட்டியை மையமாகக் கொண்டு கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் கடல் பகுதிகளில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

நட்சத்திரப் பட்டாளம்: நாயகியாக மகிமா நம்பியார் நடிக்க, தெலுங்கு பிரபல நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை மற்றும் பாடல்கள்: ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான ‘மண்டாடி மண்டாடி’ மற்றும் ‘உசுரே நீதான் புள்ள…’ ஆகிய பாடல்களும், சமீபத்தில் வெளியான டீசரும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

“மொத ராத்திரி ரொம்ப ஜாலியா ரகளையா இருந்துச்சு!” – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புகழாரம்!

MUST READ