Homeசெய்திகள்உலகம்தாயின் தியாகத்தைப் போற்றும் ஆடை: சர்வதேச ஃபேஷன் விழாவில் சி-செக்ஷன் பிரசவத்தை மையப்படுத்தி மாடலிங் செய்த...

தாயின் தியாகத்தைப் போற்றும் ஆடை: சர்வதேச ஃபேஷன் விழாவில் சி-செக்ஷன் பிரசவத்தை மையப்படுத்தி மாடலிங் செய்த ‘மிஸ் உகாண்டா’!

-

- Advertisement -

தாயமையின் மகத்துவத்தையும், பிரசவக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் உடல் மாற்றங்களையும் கௌரவிக்கும் வகையில் சர்வதேச ஃபேஷன் மேடையில் வடிவமைக்கப்பட்ட விசித்திரமான ஆடை ஒன்று உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.தாயின் தியாகத்தைப் போற்றும் ஆடை: சர்வதேச ஃபேஷன் விழாவில் சி-செக்ஷன் பிரசவத்தை மையப்படுத்தி மாடலிங் செய்த ‘மிஸ் உகாண்டா’!

வியட்நாம் ஃபேஷன் ஃபெஸ்ட்
வியட்நாமில் அண்மையில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ஃபேஷன் ஃபெஸ்ட்’ (Fashion Fest) சர்வதேச ஆடை வடிவமைப்புக் கண்காட்சியில், உலகின் முன்னணி மாடல்களும் அழகிகளும் கலந்துகொண்டு விதவிதமான உடைகளில் வலம் வந்தனர். இதில் ‘மிஸ் உகாண்டா’ பட்டவென்ற எல்லா முஹோசா (Ella Muhosa) அணிந்து வந்த உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

we-r-hiring

சி-செக்ஷன் (C-Section) தீமில் விசித்திர ஆடை
‘MOTHERHOOD’ (தாய்மை) மற்றும் ‘The Layers of Life’ (வாழ்க்கையின் அடுக்குகள்) என்ற கருப்பொருளை (Theme) மையமாகக் கொண்டு இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. பெண்களின் சி-செக்ஷன் (C-Section) அறுவை சிகிச்சை பிரசவ முறையையும், அதற்குப் பிறகான அவர்களின் உடலின் அமைப்பையும் பிரதிபலிக்கும் வகையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கீஷா (Keesha) இந்த உடையை உருவாக்கியுள்ளார்.

7 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட வடிவம்
 பெண்களின் தோலின் நிறம் மற்றும் உடலின் மாற்றங்களைக் குறிக்கும் வகையில் 7 வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டதாக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாய்மையின் போது பெண்கள் எதிர்கொள்ளும் தியாகத்தையும், பிரசவக் தழும்புகளின் அழகையும் நேர்த்தியாக எடுத்துரைக்கும் வகையில் அமைந்த இந்த ஆடை, ஃபேஷன் உலகத்தினரையும் இணையவாசிகளையும் வெகுவாக நெகிழ வைத்துள்ளது.

பிரிட்டன் அரசியல் களம்: நாடாளுமன்றத்தில் தொடக்கச் சோதனைகளை எதிர்கொள்ளும் பிரதமர் ஆண்டி பர்ஹாம்; நிதியாதார சிக்கல்களில் நைஜல் ஃபராஜ்!

MUST READ