Homeசெய்திகள்தமிழ்நாடுபனையூர் த.வெ.க தலைமை அலுவலகத்தில் திடீர் மாற்றம்: முதன்முறையாக வருகை தந்த திருமாவளவன் எம்.பி!

பனையூர் த.வெ.க தலைமை அலுவலகத்தில் திடீர் மாற்றம்: முதன்முறையாக வருகை தந்த திருமாவளவன் எம்.பி!

-

- Advertisement -

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்திற்கு முதன்முறையாக நேரில் வருகை தந்தார்.பனையூர் த.வெ.க தலைமை அலுவலகத்தில் திடீர் மாற்றம்: முதன்முறையாக வருகை தந்த திருமாவளவன் எம்.பி!

காரில் இருந்து இறங்கியதும் உற்சாக வரவேற்பு:
விசிக தலைவர் தொல். திருமாவளவன் பனையூர் அலுவலகத்திற்கு வந்தடைந்ததும், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) காரில் இருந்து இறங்கிய அவரையோ, கையைப் பிடித்து மிக அன்புடன் வரவேற்றுத் தலைமை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றார்.

we-r-hiring

முன்னதாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் உடல்மொழி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த திருமாவளவன், திடீரென தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய கூட்டணிப் பெயர் குறித்து முக்கிய ஆலோசனை:
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் தலைமையில் தோழமைக் கட்சித் தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முதன்மை அம்சங்கள்:
கூட்டணியின் பெயர்:
தவெக தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ பெயர் சூட்டுவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அடுத்தகட்ட நகர்வுகள்: வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வது, தோழமைக் கட்சிகளிடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை குறித்து முதலமைச்சர் விஜய் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விரிவாக ஆலோசித்தார்.

இக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் முன்னணித் தலைவர்களும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

கூட்டணி ஆலோசனை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனை வரவேற்ற தவெக அமைச்சர் என். ஆனந்த்!

 

MUST READ