தமிழகத்தில் கோடை மற்றும் பருவமழை சூழலில் அவ்வப்போது மாறுதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பகலில் வெயில், இரவில் மழை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை மாறுபட்ட சூழலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பகல் நேரங்களில் வழக்கம் போல வெயில் சுட்டெரிக்கும் என்றும், அதேவேளையில் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20, 21-ல் தீவிரமடையும் மழை
குறிப்பாக, வரும் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இந்தப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதாக வானிலை ஆர்வலர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அல்லது உள்ளூர் வெப்பச் சலனம் காரணமாக உருவாகும் இந்த திடீர் மழையானது, மக்களை வெயிலின் தாக்கத்திலிருந்து காக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மழை எச்சரிக்கை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் தேங்கக்கூடிய நீரை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துறைசார்ந்த அமைப்புகள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை
