புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது கூட்டணிப் பெயரைச் சொல்லத் திணறியது கூடியிருந்தவர்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியது.
நிகழ்வின் சுவாரஸ்யம்:
கூட்டணிப் பெயர் குழப்பம்: நெல்லித்தோப்பில் நடைபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தனது கட்சியின் கூட்டணியின் பெயரைச் சொல்லும்போது தடுமாறினார்.
மேடையில் தவிப்பு: “நமது கூட்டணியான மதச்சார்பற்ற நம்முடைய… மதச்சார்பற்ற சமூகநீதி முற்போக்கு கூட்டணி…!” என்று இழுத்த அவர், உடனே மேடையில் இருந்த நிர்வாகிகளிடம் கேட்டு, “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி…!” எனத் திருத்திக் கூறினார்.
சமாளிப்பும் சிரிப்பலையும்: கூட்டணிப் பெயரைச் சரியாகச் சொல்ல வரவில்லை என்பதை உணர்ந்துகொண்ட அவர், “இதை சரியாகச் சொல்வதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்!” என்று நகைச்சுவையாகக் கூறிச் சமாளித்தார்.
இதைக் கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் கூட்ட அரங்கில் விழுந்து விழுந்து சிரித்தனர்.
வடிவேல் படக் காமெடியை ஞாபகப்படுத்தும் வகையில் நாராயணசாமி மேடையில் திணறிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேசிய தேர்வுகள் முகமையின் அலுவலகத்தில் நேரில் ஆய்வு நடத்தப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை!
