கன்னட திரையுலகின் பிரபல நடிகை ரச்சிதா ராம், தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களை சந்தித்தபோது நடந்த எதிர்பாராத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அக்டோபர் 3-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் ரச்சிதா ராம், ரசிகர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுத்துவிட்டு கைகுலுக்கியுள்ளார்.
அதன்பிறகு எதிர்பாராத விதமாக ரச்சிதா ராமின் இரு கன்னங்களையும் பிடித்து கிள்ளியபடி அந்த ரசிகர் அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் ஒரு கணம் அதிர்ச்சியடைந்த ரச்சிதா ராம், பின்னர் சிரித்தபடி அந்த சம்பவத்தை கடந்து சென்றார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரச்சிதா ராம் ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.
தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் ரச்சிதா ராம் அறிமுகமானார். தற்போது அவரது பிறந்தநாள் நிகழ்வில் ரசிகர் ஒருவர் கன்னத்தை கிள்ளிய வீடியோ வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டைக்கு தயாராகும் டைகர் முத்துவேல் பாண்டியன் – ‘ஜெயிலர் 2’ டிரெய்லர் வெளியீடு அறிவிப்பு!
