திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மட்டும் 83,252 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.


அன்று 28,683 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டபோது, ஒரே நாளில் ரூ.4 கோடியே 56 லட்சம் வசூலாகியுள்ளது.
மேலும், அன்றைய தினம் 4 லட்சத்து 58 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 82 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர்.
திருமலை அஸ்வினி மருத்துவமனையில் 3,068 பேர் மருத்துவச் சிகிச்சை பெற்றதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலின் உண்டியல் காணிக்கை தொடர்ந்து பல கோடி ரூபாய் அளவில் வசூலாகி வரும் நிலையில், ஒரே நாளில் ரூ.4.56 கோடி காணிக்கை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும்” – மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை!
