Homeசெய்திகள்தமிழ்நாடுKRG குழுமம் கண்ணன் ரவி - துரைமுருகன் இல்ல திருமண விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்!

KRG குழுமம் கண்ணன் ரவி – துரைமுருகன் இல்ல திருமண விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்!

-

- Advertisement -

KRG Kannan Ravi

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் கட்டுமானம், எலக்ட்ரோ மெக்கானிக்கல் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறைகளில் முன்னணி நிறுவனமாகத் திகழும் KRG Group of Companies அமைப்பின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி – KRD Hospitality அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், KRG Productions நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான தீபக் ரவி மற்றும்,
செந்தாமரை - தீபக் ரவி திருமண விழா

we-r-hiring

திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் D.M. கதிர் ஆனந்த் – கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியினரின் மகளுமான கே. செந்தாமரை ஆகியோரின் திருமண விழா சென்னையில் மிகப்பிப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
செந்தாமரை - தீபக் ரவி திருமண விழா

இரண்டு நாட்கள் நடைபெற்ற கோலாகல விழா!

சென்னை நீலாங்கரையில் உள்ள ஈசிஆர் (ECR) பாதையில் அமைந்துள்ள R.K. கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற இந்தத் திருமணக் கொண்டாட்டத்தில், அக்டோபர் 31ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும், நவம்பர் 1ம் தேதி திருமணமும் நடைபெற்றது. இதில் முதல் நாள்  கண் கவரும் அலங்காரங்களுடன் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சிறப்பான இசைக் கச்சேரி நடைபெற்றது.

செந்தாமரை - தீபக் ரவி திருமண விழா
நவம்பர் 1ம் தேதி காலை உற்றார், உறவினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் ஆசிகளுடன் செந்தாமரை – தீபக் ரவி திருமணம் நடைபெற்றது.

திரண்டு வந்த திரை நட்சத்திரங்கள் & முக்கியப் பிரமுகர்கள்:

தென்னிந்தியத் திரையுலகமே திரண்டு வந்த இந்த விழாவில் அரசியல் மற்றும் சினிமா உலகின் பல முன்னணிச் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்:
செந்தாமரை - தீபக் ரவி திருமண விழா

  • அரசியல் தலைவர்கள்: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான  மு.க. ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி.,   க.பொன்முடி, கே.என்.நேரு,  ரகுபதி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர்யா அன்புமணி உள்ளிட்ட  அரசியல் முக்கியஸ்தர்களும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

    திரையுலக முன்னணி நடிகர்கள்: நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், வைகைப்புயல் வடிவேலு, ரவி மோகன் (ஜெயம் ரவி), கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், கார்த்தி, பிரபுதேவா, இயக்குநர் சங்கர், அருண் விஜய், சூரி, சாந்தனு பாக்யராஜ், வைரமுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகைகள் மீனா, குஷ்பு – சுந்தர் சி, ரோஜா – செல்வமணி, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆதி, தயாரிப்பாளர் போனிகபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருமண மேடையில் நடிகர் வடிவேலு மணமக்களுக்கு பூங்கொத்து வழங்கி, உற்சாகமாக நடனமாடி அரங்கத்தை மகிழ்வித்தார். மேலும், பிரபல நட்சத்திரச் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் சுவையான விருந்து உபசரிப்பும் இவ்விழாவின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது.

  • திரையுலகில் KRG குழுமத்தின் தடம்:

சர்வதேச தொழிலதிபராக விளங்கும் கண்ணன் ரவி, தமிழ் சினிமாவில் KRG Productions மூலம் நுழைந்து ‘இராவண கோட்டம்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘TN 2026’ உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராகத் தீபக் ரவி முக்கியப் பங்காற்றி வருகிறார்.

வணிக உலகிலும், இந்தியத் திரையுலகிலும் முத்திரை பதித்து வரும் KRG குழுமத்தின் இந்த பிரம்மாண்டக் குடும்ப விழா, இந்தியத் திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் வெகு விமரிசையாக நிறைவடைந்தது.

MUST READ