Homeசெய்திகள்தமிழ்நாடு“குழந்தைக்கு பெயர் வைக்காம போயிட்டார் விஜய் அண்ணா ” - விஜயமங்கலத்தில் கலங்கி நின்ற தாய்..!

“குழந்தைக்கு பெயர் வைக்காம போயிட்டார் விஜய் அண்ணா ” – விஜயமங்கலத்தில் கலங்கி நின்ற தாய்..!

-

- Advertisement -

3 மாதக் குழந்தைக்குப் பெயர் வைக்காமல் சென்ற தலைவர்: விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தாயின் நெகிழ்ச்சி கலந்த வேதனை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவடுமான விஜய் கோவையிலிருந்து சாலை மார்க்கமாகப் பெருந்துறை நோக்கி ரோடு ஷோ (Road Show) சென்றார். கோவையிலிருந்து விஜயமங்கலம் வழியாகப் பெருந்துறை வரை நடைபெற்ற விஜய்யின் பிரம்மாண்ட ரோடு ஷோ  மற்றும் வாகனப் பிரச்சாரத்தின்போது சாலையின் இருமருங்கிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

we-r-hiring

மக்கள் வெள்ளத்திற்கு இடையே காரின் கண்ணாடியைத் திறந்து கையசைத்தபடியும், தொண்டர்களின் அன்பை ஏற்றபடியும் விஜய் பயணித்தார். பெருந்துறையில் நடைபெற்ற மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற விஜய், கட்சித் தொண்டர்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கிப் பேசினார்.

வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையிலும், விஜய்யைக் காணப் பொதுமக்கள் திரண்டதால் விஜயமங்கலம் மற்றும் பெருந்துறை பகுதிகள் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தன.

3 மாதக் குழந்தைக்குப் பெயர் வைக்காமல் சென்ற தலைவர்: விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தாயின் நெகிழ்ச்சி கலந்த வேதனை!

கண்ணீர் மல்க காத்திருந்த தாய்!

முதலமைச்சர் விஜயைக் காண்பதற்காக விஜயமங்கலம் டோல்கேட் அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு காத்திருந்த நிலையில், சேலம் பகுதியைச் சேர்ந்த பூஜா ஸ்ரீ என்ற பெண், தனது 3 மாத கைக்குழந்தையுடன் விஜயைச் சந்தித்துத் தன் குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்காக விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே காத்திருந்தார். ஆனால் இறுதிவரை முதலமைச்சரை சந்தித்து பெயர் சூட்ட முடியாமல் போனதாக அவர் வேதனை தெரிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூஜா ஸ்ரீ, “ஏற்கனவே தாராபுரத்தில் விஜய்யை மிக எளிதாகப் பார்க்க முடிந்தது. ஆனால், இங்கு விஜயமங்கலம் பகுதியில் காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். தலைவர் விஜய்யும் வேனில் இருந்து கீழே இறங்காமல், காரில் அமர்ந்தபடியே கையசைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.  காலை 9 மணி முதல் காத்திருந்தும் குழந்தைக்குப் பெயர் வைக்க முடியாமல் போனது மிகவும் ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கிறது” என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

MUST READ