Homeசெய்திகள்"தளபதியை அடுத்து தலயுடன் கூட்டணி‌... திரை உலகை வியக்க வைக்கும் திரிஷா"

“தளபதியை அடுத்து தலயுடன் கூட்டணி‌… திரை உலகை வியக்க வைக்கும் திரிஷா”

-

- Advertisement -

துணிவு படத்திற்கு பின் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் ‘விடா முயற்சி’. இத்திரைப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இவர் மீகாமன், தடம், தடையறத் தாக்க, கழக தலைவன், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது முதன்முறையாக அஜித்துடன் இணைந்து ‘விடாமுயற்சி‘ திரைப்படத்தை இயக்குகிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் இப்படம் உருவாக இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகிகள் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

we-r-hiring

சமீபத்தில் இந்த படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், கரீனா கபூர் உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன.

தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வெளிவந்துள்ளது.

அஜித்தும் திரிஷாவும் இணைந்து ஜி, கிரீடம் மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் விடாமுயற்சி திரைப்படத்தில் இணைய இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் திரிஷா கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ