Homeசெய்திகள்சினிமாஒரே திரையில் விஜய் சேதுபதி, மோகன்லால், நாகார்ஜுனா, சுதீப்: தெறிக்கவிடும் பிக்பாஸ் புதிய புரமோ!

ஒரே திரையில் விஜய் சேதுபதி, மோகன்லால், நாகார்ஜுனா, சுதீப்: தெறிக்கவிடும் பிக்பாஸ் புதிய புரமோ!

-

- Advertisement -

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளின் பிக்பாஸ் தொகுப்பாளர்களான விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப் மற்றும் மோகன்லால் ஆகியோரை ஒரே திரையில் கொண்டுவந்து ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புரமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

we-r-hiring

செப்டம்பர் 6-ல் பிரம்மாண்ட தொடக்கம் தென்னிந்தியாவின் 4 மொழிகளுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சிகளும் வரும் செப்டம்பர் 6 அன்று ஒரே நாளில் தொடங்க உள்ளதை முன்னிட்டு இந்த சிறப்பு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் கலாச்சாரம் மற்றும் உணவுகளைக் கொண்டாடும் வகையில் நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜியோஸ்டார் நிர்வாகி பேட்டி இதுகுறித்து ஜியோஸ்டார் (தெற்கு) பொழுதுபோக்கு பிரிவின் தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில்:

“எங்களது 4 தொகுப்பாளர்களும் தங்களது ரசிகர்களுடன் தனித்துவமான பிணைப்பைக் கொண்டுள்ளனர். விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, கிச்சா சுதீப் மற்றும் மோகன்லால் ஆகியோரை தென்னிந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப, அவர்களின் இயல்பு மாறாமல் ஒன்றாகக் கொண்டுவர இந்த விளம்பரம் நல்ல வாய்ப்பாக அமைந்தது. இவர்கள் நால்வரையும் ஒரே திரையில் காண்பது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?: ரசிகரின் பரிந்துரைக்கு நடிகை சமந்தாவின் கலகலப்பான பதில்!

 

MUST READ