- Advertisement -
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா ஜவஹர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை வளர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராக கவிதா ஜவஹர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த கவிதா ஜவஹர், தனது நியமனத்திற்கு வாழ்த்து பெற்றார்.
லஞ்சம், ஊழல், போதைப் பழக்கத்தின் பக்கம் போய்விடாதீர்கள்! – மாணவர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுரை!
