நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
90 காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்த அர்ஜுன் தற்போது பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவருக்கு ஐஸ்வர்யா அஞ்சனா என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

அதில் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2013 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பின் கடந்த 2018 ஆம் ஆண்டு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான ‘பிரேம பரகா ‘ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் சரியாக வெற்றி பெறாத நிலையில், இதை தொடர்ந்து இவருக்கு வேறு எதுவும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதன் பிறகு ஐஸ்வர்யா அர்ஜுன் பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை சில வருடங்களாக காதலித்து வந்திருக்கிறார். தற்போது இவர்களின் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தம்பி ராமையாவின் மகன் உமாபதி கடந்த 2017 ஆம் ஆண்டு ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து அவர் மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.