மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
அரசியலில் சாதிய ஒடுக்கு முறைகள் மற்றும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசியுள்ள திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படத்தில் மாமன்னாக நடித்த வடிவேலு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
சில காலங்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த வடிவேலுவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் ‘லைஃப் இஸ் பியூட்டி’ என்ற திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இது ஒரு இத்தாலியன் படத்தை ரீமேக் செய்யப்பட்டு உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.