spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவடிவேலு இந்த நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர்..... இயக்குனர் விக்னேஷ் சிவன்!

வடிவேலு இந்த நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர்….. இயக்குனர் விக்னேஷ் சிவன்!

-

- Advertisement -

விக்னேஷ் சிவன், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

we-r-hiring

திரைக்கு வரும் முன்பு இத்திரைப்படத்திற்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. அதையெல்லாம் தாண்டி கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அரசியலில் சாதிய ஒடுக்கு முறைகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து இப்படம் பேசுகிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் சார்ந்த உண்மைகளை மிகத் தெளிவாக விளக்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் மாரி செல்வராஜ், ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் சொல்லப்பட வேண்டிய, சொல்வதற்கு சற்று சிக்கலான சமதர்ம சூத்திரத்தை தன் கையில் எடுத்து அதை தன் பாணியில் படமாக்கி இருக்கிறார்.
இவ்வாறாக பல்வேறு விதமான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் மாமன்னன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

குறிப்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின், இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இப்படம் குறித்து தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைந்து தனது பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்.

மாமன்னன் படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன்! வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டுகால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கெளரவமாக அமையும். முக பாவனையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கியிருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளை நினைவூட்டிவிடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டியிருக்கும் வடிவேலு சார் இந்த நூற்றாண்டு கண்ட ஆகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகமில்லை!

உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தபோதிலும் ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்க பலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ