spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவசூலிலும், விமர்சனத்திலும் சாதிக்கும் 'மாமன்னன்'..... கேக் வெட்டி கொண்டாடிய பட குழுவினர்!

வசூலிலும், விமர்சனத்திலும் சாதிக்கும் ‘மாமன்னன்’….. கேக் வெட்டி கொண்டாடிய பட குழுவினர்!

-

- Advertisement -

மாமன்னன் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் மாமன்னனாக வடிவேலு நடித்துள்ளார். வடிவேலுவின் மகனாக உதயநிதி ஸ்டாலினும் வில்லனாக பகத் பாஸிலும் நடித்துள்ளனர்.

we-r-hiring

இந்தப் படம் அரசியலில் சாதிய ஒடுக்குமுறை ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து முழு நீள படமாக எடுக்கப்பட்டுள்ளது.மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவான இந்த படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது.

கிட்டத்தட்ட 700 திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் ஒரே நாளில் 7 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த படம் இரண்டு நாட்களில் 17 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் இனிவரும் நாட்களிலும் அதிக வசூலை அள்ளி தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் மாமன்னன் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ