spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மாமன்னன்' எப்படிப்பட்ட படம்னு மக்கள் தான் சொல்லணும்....... செய்தியாளர்களுக்கு மாரி செல்வராஜ் பேட்டி!

‘மாமன்னன்’ எப்படிப்பட்ட படம்னு மக்கள் தான் சொல்லணும்……. செய்தியாளர்களுக்கு மாரி செல்வராஜ் பேட்டி!

-

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்டோரின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் சொல்லப்பட வேண்டிய மற்றும் சொல்வதற்கு சற்று சிக்கலான சம தர்ம சூத்திரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வன்முறையே விரும்பாத தந்தையாக வடிவேலுவும் தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் இளைஞனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்துள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷ் இதில் கம்யூனிஸ்ட் ஆக நடித்துள்ளார். தன்னைவிட கீழானவர்களிடம் தோற்று விடக்கூடாது என்ற முறைப்போடு திரியும் வில்லன் கதாபாத்திரத்தில் பகத்ஃபாஸில் நடித்துள்ளார்.

we-r-hiring

உதயநிதி ஸ்டாலினின் ரட்சகன் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று திரையரங்குகளில் வெளியான இந்த படத்தின் முதல் காட்சியை படக்குழுவினருடன் இணைந்து பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் மாரி செல்வராஜ், “மாமன்னன் திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட செய்தியை பேசக் கூடியது. இந்த படம் குறித்து மக்கள் நிச்சயம் பேசுவார்கள். இந்த படம் எதை உணர்த்துகிறது எதுவாக உள்வாங்கப்படுகிறது என்பதை இனி மக்கள் தான் கூற வேண்டும். இந்த படத்தை எடுக்க முடியுமா என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் இந்த படம் வெளிவந்ததற்கு உதயநிதிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ