டிமான்ட்டி காலனி 3 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து, அருள்நிதி – பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்டது. அதே சமயம் இப்படத்தின் இறுதியில் இதன் மூன்றாம் பக்கத்திற்கான லீடு கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி டிமான்ட்டி காலனி 3- THE END IS TOO FAR என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது கதாநாயகனுக்கும், ரகு என்ற கேரக்டருக்கும் இடையிலான கதையாக இருக்கும் போல் தெரிகிறது. மேலும் கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘டிமான்ட்டி காலனி 3’ படத்தில் அருள் நிதியுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், விஜே அர்ச்சனா ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே டிமான்ட்டி காலனி 2 படத்திலும் நடித்திருந்தனர். இது தவிர ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தில் நடிகை மியா ஜார்ஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.