spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' .... வெளியான அதிரி புதிரி அப்டேட்!

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ …. வெளியான அதிரி புதிரி அப்டேட்!

-

- Advertisement -

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' .... வெளியான அதிரி புதிரி அப்டேட்!

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் 69வது படமாக உருவாகி வரும் படம்தான் ஜனநாயகன். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே,மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' .... வெளியான அதிரி புதிரி அப்டேட்!அதே சமயம் இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அரசியல்வாதியாக மாறியுள்ள விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே சென்னை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 2026 ஜனவரி மாதம் 9ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு இப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் பல சர்ப்ரைஸ்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' .... வெளியான அதிரி புதிரி அப்டேட்!மேலும் இப்படத்தில் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியா ரோலில் நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இவர்கள் மூவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பத்திரிக்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

MUST READ