இட்லி கடை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷின் 52 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தை நடிகர் தனுஷ் தானே இயக்கி, நடித்துள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இப்படமானது 2025 அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், ‘என்ன சுகம்’ எனும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாக இருக்கிறது.
இந்த பாடலானது நாட்டுப்புற பாடலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. தனுஷ் – ஜி.வி. பிரகாஷ் கம்போவில் வெளியாகும் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் நிலையில் இந்த பாடலும் இணையத்தில் ட்ரெண்டாகும் என நம்பப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


