Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் அந்த படம் தான் நான் முதலில் பண்ண வேண்டியது.... விஷ்ணு விஷால்!

விஜய் ஆண்டனியின் அந்த படம் தான் நான் முதலில் பண்ண வேண்டியது…. விஷ்ணு விஷால்!

-

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால், தான் முதலில் பண்ண வேண்டிய படம் குறித்து பேசி உள்ளார்.விஜய் ஆண்டனியின் அந்த படம் தான் நான் முதலில் பண்ண வேண்டியது.... விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவின் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் தன்னுடைய முதல் படத்திலேயே கிராமத்து கதாநாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி ஆகிய வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இது தவிர நடிகர் விஷ்ணு விஷால் ஆர்யன், ஒரு மாம்பழ சீசனில், இரண்டு வானம் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவர் தான் நடிக்க இருந்த முதல் படம் குறித்து பேசி உள்ளார். விஜய் ஆண்டனியின் அந்த படம் தான் நான் முதலில் பண்ண வேண்டியது.... விஷ்ணு விஷால்!அதன்படி அவர், ” விஜய் ஆண்டனியின் ‘நான்’ படம் தான் நான் முதலில் பண்ண வேண்டிய படம். என்னை தான் முதலில் அந்த படத்திற்கு தேர்வு செய்தார்கள். அந்த படத்திற்காக நான் என்னுடைய உடம்பை கூட தயார் செய்தேன். ஆனால் எதுக்கு என்னை அந்த படத்தில் இருந்து தூக்கி போட்டாங்க என்று எனக்கு தெரியவில்லை. அன்னைக்கு நான் நேராக சென்று என்னை அசிங்கப்படுத்துங்க ஓகே. ஆனா எங்க அப்பாவ அசிங்கப்படுத்தாதீங்க. எனக்கு படிப்பு இருக்கிறது. நான் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு உடனே வேலைக்கு போய் விட்டேன்” என்று தன்னுடைய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

MUST READ