spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!

இன்று வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!

-

- Advertisement -

இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.

மாவீரன்

we-r-hiring

மண்டேலா படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஒரு பேண்டஸி கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

பாபா பிளாக் ஷீப்

ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பாபா பிளாக் ஷீப். இந்த படத்தில் ஆர் ஜே விக்னேஷ் காந்த், அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

பத்மினி

குஞ்சாக்கோ போபன், அபர்ணா பால முரளி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பத்மினி. இப்படத்தை சென்னா ஹெக்டே இயக்கியுள்ளார். ஸ்ரீராஜ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்ய ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார்.

கடந்த ஜூன் 7ம் தேதியே வெளியாக இருந்த திரைப்படம் கேரளாவில் பெய்த பெருமழை காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இப்படம் இன்று வெளியாகிறது.

MUST READ