Homeசெய்திகள்சினிமாமாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்த நடிகர் இவர்தான்....... ரகசியத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

மாவீரன் படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்த நடிகர் இவர்தான்……. ரகசியத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

-

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி மாவீரன் என்ற பெயரில் தமிழிலும் மகாவீருடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

ஒரு பேண்டஸி கதைகளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதே விழாவில் படத்தின் டிரைலரும் வெளியானது.

இந்த ட்ரெய்லரில், சிவகார்த்திகேயன் மேலே பார்க்கும் போதெல்லாம் அவருக்கு ஒரு விதமான பவர் கிடைப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் வானத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு கடவுளின் குரல் கேட்கிறது. அந்தக் குரல் யாருடைய குரல் என்று சமீபத்தில் ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.
ஒரு பக்கம் ரஜினிகாந்த் என்றனர். மறுபக்கம் கமல்ஹாசன் என்றனர்.
இதற்கிடையில் தனுஷ், மாவீரன் படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தனுஷ் தரப்பில் அது மறுக்கப்பட்டது.

மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பாக விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.அதனை சிவகார்த்திகேயனே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி  செய்துள்ளார்.

“எனது அன்பான சகோதரர் விஜய் சேதுபதி, உங்களின் செயலுக்கு நன்றி. மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்று பதிவிட்டு விஜய் சேதுபதி தான் மாவீரன் திரைப்படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்து இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ