Homeசெய்திகள்சினிமா'ஜெய் பீம்' மணிகண்டன் நடிக்கும் புதிய படம்...... பூஜையுடன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு!

‘ஜெய் பீம்’ மணிகண்டன் நடிக்கும் புதிய படம்…… பூஜையுடன் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு!

-

- Advertisement -

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மணிகண்டன் ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து குட் நைட் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் மணிகண்டன் நடிகர் அதர்வாவுடன் இணைந்து மத்தகம் எனும் வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

we-r-hiring

இந்நிலையில் மற்றொரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்குகிறார். இதில் மணிகண்டன் உடன் இணைந்து கௌரி பிரியா ரெட்டி, கண்ணன் ரவி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறது. ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை உடன் தொடங்கியுள்ளது இதனை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ