Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'கிங் ஆஃப் கோத்தா'.... டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங் ஆஃப் கோத்தா’…. டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

கிங் ஆஃப் கோத்தா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அபிலாஷ் ஜோசி இயக்கத்தில் கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரித்திகா சிங், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் ,சபீர் கல்லாரக்கல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் கிலாடி வி ஆபிரகாம் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு
வெளியாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

MUST READ