Homeசெய்திகள்சினிமா"இந்தி தேசிய மொழி" எனக் கூறிய விவகாரம்: கன்னட ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர்...

“இந்தி தேசிய மொழி” எனக் கூறிய விவகாரம்: கன்னட ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் சிவராஜ்குமார்!

-

- Advertisement -

இந்தியை நாட்டின் “தேசிய மொழி” எனக் கூறி சர்ச்சையில் சிக்கிய பிரபல கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார், தனது பேச்சால் குழப்பம் ஏற்பட்டதற்காக கன்னட ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்."இந்தி தேசிய மொழி" எனக் கூறிய விவகாரம்: கன்னட ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் சிவராஜ்குமார்!

சர்ச்சையைக் கிளப்பிய பேச்சு
இயக்குநர் ஆர். சந்துரு இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’. 1990 முதல் 2000-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா கடந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெற்றது. கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தில் சிவராஜ்குமாரிடம் இந்தியில் பேசுவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்தி ஒரு எளிதான மொழி, அது நாட்டின் தேசிய மொழி. அது எங்களுக்குத் தெரியாமல் எப்படி இருக்கும்?” எனப் பதிலளித்திருந்தார்.

we-r-hiring

ரசிகர்கள் கொந்தளிப்பும் மன்னிப்பும்
சிவராஜ்குமாரின் இந்தப் பதில் கன்னட ரசிகர்கள் மற்றும் தமிழ், கன்னட மொழி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே படத்தின் புரொமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட சிவராஜ்குமார், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.

இது குறித்து மேலும் அவர் பேசுகையில், “நான் இந்தியை தவறாக ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டு விட்டேன். ஆனால் அது நாட்டின் பல மொழிகளில் ஒன்று மட்டுமே. எங்கள் தாய்மொழியான கன்னடம் தான் எங்களுக்கு எப்போதும் முதன்மையானது. நான் தவறாகக் குறிப்பிட்டதால் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்திக்காரர்களுக்கு அவர்களுடைய மொழி எந்த அளவு முக்கியமோ, அதேபோல எங்களுக்கு எங்கள் கன்னட மொழி முக்கியம்” என்று தெரிவித்தார்.

கைவசம் உள்ள படங்கள்
தவறுதலாகக் கூறிய கருத்துக்கு உடனடியாக ஒரு மூத்த நடிகர் மன்னிப்பு கேட்ட சம்பவம் திரைத்துறையில் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் பெற்றுள்ளது. நடிகர் சிவராஜ்குமார் தற்போது ‘பெயில்’, ‘டாட்’, ‘666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்’ ஆகிய கன்னடப் படங்களிலும், தமிழில் ‘ஜெயிலர் 2’ மற்றும் ‘பிக்காசோ’ ஆகிய பிரம்மாண்ட படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’: செப்டம்பர் 25-ல் திரையரங்குகளில் வெளியீடு!

MUST READ