நடிகை மாளவிகா மோகனன் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், தனது ஆரம்ப கால தமிழ் சினிமா அனுபவங்கள் மற்றும் நடிகை த்ரிஷா தனக்கு அளித்த ஆதரவு குறித்து அவர் பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.


‘பேட்ட’ படத்தில் கிடைத்த அறிமுகம்
மாளவிகா மோகனன் தமிழில் நடிகையாக அறிமுகமான திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’. அப்போது அவர் தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமுகமாக இருந்தார்.
வாரணாசி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, த்ரிஷாவுடன் இணைந்து சில காட்சிகளில் நடித்ததாகவும், அந்த காலகட்டத்தில் த்ரிஷா தன்னை மிகவும் அன்பாகவும் இயல்பாகவும் நடத்தினார் என்றும் மாளவிகா தெரிவித்துள்ளார்.
“என்னை மிகவும் Comfortable-ஆக உணர வைத்தார்”
படப்பிடிப்பின்போது த்ரிஷா தன்னை பல விஷயங்களில் இணைத்துக் கொண்டதாக மாளவிகா கூறியுள்ளார். ஓய்வு நேரத்திலும் தன்னுடன் நேரத்தை செலவிடும் வகையில் த்ரிஷா நடந்து கொண்டதாகவும், தான் ஒரு புதுமுகம் என்ற எந்தவித தயக்கமும் இல்லாமல் பழகியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
‘மாஸ்டர்’ வாய்ப்பு கிடைத்தபோது வந்த மெசேஜ்!
மாளவிகாவுக்கு விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, த்ரிஷா தனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்து மெசேஜ் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைத்த அந்த ஆதரவு மிகவும் உண்மையானதாக இருந்ததாகவும், சினிமாவில் ஒருவர் மற்றொருவரின் வெற்றியை மனதார கொண்டாடுவது அரிதான விஷயம் என்றும் மாளவிகா குறிப்பிட்டுள்ளார்.
‘சர்தார் 2’ வெளியீட்டுக்கு தயாராகும் மாளவிகா
இதற்கிடையில் மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, ஆஷிகா ரங்கநாத், ராஷி விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மாளவிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் பி.எஸ். மித்ரனும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, படத்தின் prequel பகுதியில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் அதிரடி இணைப்பு: முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் சீமான்!
