Homeசெய்திகள்சினிமா'மொத ராத்திரி' படத்திற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பாராட்டு: "அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து!"

‘மொத ராத்திரி’ படத்திற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பாராட்டு: “அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து!”

-

- Advertisement -

திரையுலகில் வெற்றி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிதாக உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.'மொத ராத்திரி' படத்திற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பாராட்டு: "அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து!"

“அறிவுப்பூர்வமான சிரிப்பு விருந்து”
இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படம் ஒரு மிகச் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது. அறிவுப்பூர்வமாகவும் அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருக்கும் ஒரு சிறந்த சிரிப்பு விருந்தாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. படத்தைச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் ராஜா கருப்பசாமி, முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள் ரிஷிகாந்த், அனிஷ்மா மற்றும் இத்திரைப்படத்தின் முழுப் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பாராட்டியுள்ளார்.

we-r-hiring

ஆர்.ஜே.பாலாஜி போன்ற முன்னணி இயக்குநர் மற்றும் நடிகரின் இந்த வெளிப்படையான பாராட்டு, ‘மொத ராத்திரி’ திரைப்படக் குழுவினருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருப்பதோடு, ரசிகர்கள் மத்தியிலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

MUST READ